.

Pages

Saturday, October 28, 2017

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் (படங்கள்)

பேராவூரணி அக்.28
தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் பேராவூரணி அரசு மருத்துவமனை மற்றும் பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா மெட்ரிக் பள்ளி இணைந்து பள்ளி விழா அரங்கில், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கை சனிக்கிழமை அன்று நடத்தினர்.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளரும், மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணை பொதுச்செயலாளருமான டாக்டர் ஜி.ஆர்.ஶ்ரீதர் தலைமை வகித்து உரையாற்றினார். பள்ளி முதல்வர் சுரேஷ் வரவேற்றார்.

இதில், தொற்றாநோய் பிரிவு மாவட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எட்வின் கலந்து கொண்டு பேசுகையில், 
"30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தவறாமல் அரசு மருத்துவமனைகளிலோ, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ சென்று மார்பக பரிசோதனையை இலவசமாக செய்து கொள்ளவேண்டும். நோய் வருமுன் கண்டறிந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் விழிப்புணர்வை  மாணவிகள் தங்கள் குடும்பத்தார், அக்கம்பக்கத்தினருக்கு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

நிகழ்ச்சியில் செவிலியர்கள் சத்யா, ரேவதி ஆகியோர் மாணவிகளுக்கு மார்பக புற்றுநோய் குறித்து கருத்தரங்கில் விளக்கமளித்தனர். பள்ளி ஆசிரியைகள் மனோசித்ரா, ரமாதேவி, சத்யா, மேனகா, ரமணா, கவிதா, சுதா, வினோதா, ஶ்ரீபிரியா மற்றும் மேல்நிலைப்பிரிவு மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.