.

Pages

Monday, October 23, 2017

அதிரையில் புதிதாக ஹாட் & கூல் பார் திறப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், அக். 23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஏ.ஜே ஜியாவுதீன். இவர் புதிதாக தொடங்கியுள்ள 'மூஸா ஹாட் & கூல் பார்' நிறுவனத்தின் திறப்பு விழா, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே, வேல் முருகன் டீ கடை பின்புறம் அமைந்துள்ள ஜக்கரியா வணிக காம்ப்ளக்ஸில் இன்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவில், நிறுவன உரிமையாளர் ஏ.ஜே ஜியாவுதீன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பின் பேரில், 'தொழில் அதிபர்' ஜித்தா ஏ. சாகுல் ஹமீது, அதிரை பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் ஆகியோர் கலந்துகொண்டு, புதிய நிறுவனத்தை திறந்து வைத்தனர். விழாவில் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து, நிறுவன உரிமையாளர் ஏ.ஜே ஜியாவுதீன் கூறியது;
எங்களது நிறுவனத்தில், அனைத்து பழ வகைகளில் பிரஸ் ஜூஸ், சூப், மிளகுப்பால், சுண்டல், கபாப், சாண்ட்விச், பிரட் ஆம்ப்லட், சிக்கன் பன் உள்ளிட்டவை குறைவான விலையில், சுத்தமாக, சுவையாக உடனுக்குடன் தயார் செய்து வழங்கப்படும். மேலும் ஆர்டரின் பேரில், மொத்தமாகவும் தயார் செய்து விநியோகிக்கப்படும். அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியினர், பயணிகள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
நிறுவனத் தொடர்புக்கு: 8760399986
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.