தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை உறுதிபடுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பாக சனிக்கிழமை காலை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர், காங்கிரஸ் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ண சாமி வாண்டையார், திமுக மாவட்ட துணைச் செயலர் கா. அண்ணாதுரை, திமுக மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் எஸ்.எச் அஸ்லம், தஞ்சை மாநகர செயலர் நீலமேகம் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அரசியல் தலைவர்கள் அரசு மருத்துவமனையை நாடுவதில்லை உதாரணமா... அம்மையார் அப்போலோவில் இருந்தார் அதே நேரம் கலைஞர் இன்னொரு தனியார் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றார்., அரசு தலைமையே அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லாதபோது இவர்கள் ஏன் போராட்டம் நடத்த வேண்டும்?? கேள்வி சரிதானே?
ReplyDelete