.

Pages

Monday, October 30, 2017

2 வயது குழந்தையை காப்பாற்ற சிறுத்தையுடன் போராடி ஜெயித்த இளம்பெண் !

அதிரை நியூஸ்: அக்.30
2 வயது குழந்தையை காப்பாற்றுவதற்காக சிறுத்தையுடன் போராடி ஜெயித்துள்ளார் இளம்பெண்.

மத்திய பிரதேச மாநிலம் மொரீனொ மாவட்டத்தின் பைசாய் கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா என்ற 25 வயது இளம்பெண். இவர் தனது 2 வயது பெண் குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

பால்பூர் - குனோ வன உயிரின சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் 150 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கிராமத்திற்கு பள்ளத்தாக்குகளும், புதர்களும் நிறைந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்.

இந்நிலையில் சம்பவத்தன்று இப்பெண்ணின் 2 வயது குழந்தையை கொல்லும் நோக்கத்துடன் பாய்ந்து தாக்கிய சிறுத்தை (Leopard) ஒன்றை தனது கைகளால் தொடர்ந்து தாக்கி சுமார் 20 நிமிடங்கள் போராடினார். இடையில் இவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலுள்ள கிராமத்தினர் உதவிக்கு வந்ததை தொடர்ந்து சிறுத்தை தப்பி ஓடியது.

தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், இப்பகுதியில் மனிதர்களை சிறுத்தை தாக்கும் சம்பவம் இதுவே முதன்முறை என்பதால் தீர விசாரித்த பின்பே சம்பவத்தை உறுதி செய்ய முடியும் எனக்கூறியதுடன் தற்காலிகமாக சில வன காவலர்களை அக்கிராமத்தில் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளனர்.

வரலாற்றில் RED-TAPISM 

(Red-tapism என்றால் என்ன? 
Behaviour, practices, or attitudes associated with an excessive adherence to official rules and formalities; red tape.)

இந்தியாவில் புகழ்பெற்ற ஆங்கிலேய வேட்டைக்காரர் ஜிம் கார்பெட் அவர்களை பற்றி படித்திருப்பீர்கள், இவருடைய நினைவாகத் தான் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள இந்தியாவின் பழமையான புலிகள் சரணாலயம் 'ஜிம் கார்பெட் நேஷனல் பார்க்' என்று அழைக்கப்படுவதையும் அறிவீர்கள்.

இவருடைய காலத்திலும் புலி ஒன்று காடுகள் வழியாக சென்று கொண்டிருந்த 2 கிராமத்து நண்பர்களில் ஒருவரை தாக்க மற்றவர் தீரமுடன் புலியுடன் போராடி தனது குடல் சரிந்து குற்றுயிரான நண்பரை காப்பாற்றிக் தோளில் தூக்கி கொண்டு வந்தார். தாக்கிய புலியும் இவர் தனது கிராமத்திற்குள் நுழையும் வரை பின் தொடர்ந்து வந்தது.

இந்த வீரதீரச் செயலுக்காக அந்த கிராமத்து நண்பருக்கு ஆங்கிலேயே அரசிடம் அங்கீகாரம் பெற்றுத் தர போராடினார் ஆனாலும் நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை (Red-Tape) எனக்கூறிய ஆங்கிலேயே அரசு மறுத்ததை வருத்தத்துடன் பதிவு செய்து சென்றுள்ளார் ஜிம் கார்பெட்.

எனவே, வெள்ளையன் ஆண்டாலும் கொள்ளையன் ஆண்டாலும் பாமர இந்தியர்களின் வீரதீரச் செயல்கள் மறுக்கப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

Source: Hindustan Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.