.

Pages

Sunday, October 22, 2017

ஜப்பானை மிரட்டும் அதிவேகப் புயல் ~ நாளை (அக். 23) அதிகாலை வீசக்கூடும் !

அதிரை நியூஸ்: அக். 22
ஜப்பானை மிரட்டும் அதிவேகப் புயல் நாளை (அக். 23) திங்கட்கிழமை அதிகாலை வீசக்கூடும்.

தற்போது மேற்கு மற்றும் மத்திய ஜப்பானில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில் 'சூப்பர் டைப்பூன் லேன்' (Super Typhoon Lan) எனப்பெயர் சூட்டப்பட்டுள்ள புயற்காற்று மணிக்கு 252 கி.மீ வேகத்தில் ஜப்பானிய நேரப்படி (நாளை) திங்கட்கிழமை அதிகாலை 6 மணியளவில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயலைத் தொடர்ந்து ஜப்பானின் பல்வேறு தீவுகளுக்கும் படகு போக்குவரத்துக்கள் (ferry Services) நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது டோக்கியோவிலிருந்து 500 மைல் தூரத்தில் நிலை கொண்டுள்ள இந்த புயல் நாளை காலையில் டோக்கியோ பே எனுமிடத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 நிலை சூறவளி (Category 4 Hurricane) என எச்சரிக்கப்பட்டுள்ள இந்த அதிவேக சூறவளியால் மேற்கு மற்றும் மத்திய ஜப்பான் பிரதேசங்களில் மண்சரிவு (Landslides), வெள்ளம் (Flood), உயரே எழும் அலைகள் (High Waves) போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழலாம். இது குறித்த எச்சரிக்கை அறிவிப்பை தனது நாட்டு மக்களுக்கு அமீரக அரசு விடுத்துள்ளதுடன் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.