.

Pages

Sunday, October 22, 2017

அபுதாபியில் டிச.1 முதல் நிரந்தர வாகன லைசென்ஸ் அட்டை அறிமுகம் !

அதிரை நியூஸ்: அக். 22
வரும் டிச. 1 ந் தேதி முதல் அபுதாபியில் நிரந்தர வாகன லைசென்ஸ் அட்டை அறிமுகம்.

அபுதாபியில் தற்போது வருடந்தோறும் புதுப்பிக்கப்படும் வாகனங்களுக்கு 'முழுக்கிய' எனும் புதிய லைசென்ஸ் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இனி 2017 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் காலாவதியாகும் அட்டைகளுக்கு மாற்றாக தேதி குறிப்பிடப்படாத நிரந்தர பயன்பாட்டிற்கான லைசென்ஸ் அட்டைகள் (permanent registration card for vehicles) வழங்கப்படவுள்ளன.

வழமைபோல் ஆண்டுதோறும் வாகன சோதனைக்கு உட்படுத்துவதுடன் இன்ஷூரன்ஸ் சான்றிதழையும் புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு வாகனத்திற்கும் அதன் ஆண்டு காலாவதி தேதி குறித்த நினைவூட்டல் எஸ்எம்எஸ் மூலம் ஒரு மாதத்திற்கு முன்பாக அதன் உரிமையாளர்களுக்கு அனுப்பப்படும்.

வாகன லைசென்ஸ் தேதி காலாவதி (Expiry Date) குறித்து தெரிந்து கொள்ள விரும்புவோர் அபுதாபி போலீஸின் ஸ்மார்ட் ஆப் அல்லது இணைய தளத்திற்கு சென்றும் தெரிந்து கொள்ளலாம்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.