தஞ்சாவூர் மாவட்டத்தில் எதிர்வரும் 29.11.2017 அன்று நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர், ஒரத்தநாடு, திருவோணம் ஆகிய ஒன்றியங்களில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மினி மராத்தான் மற்றும் விளையாட்டுப் போட்டிகள், மீனவர்களுக்கான படகு போட்டிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் இன்று (25.10.2017) தொடங்கி வைத்தார்.
பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான 1.5 கிலோ மீட்டர் மினி மராத்தான் ஓட்டப்பந்தயத்தை தொடங்கி வைத்தார்கள். ஒட்டப்பந்தயத்தில் 200க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இவ்வோட்டபந்தயம் மணிக்கூண்டு, அறந்தாங்கி முக்கம், அண்ணாசிலை, அஞ்சல் அலுவலகம் வழியாக பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை வந்தடைந்தது. பின்னர், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிக்களுக்கான கைபந்து மற்றும் கபாடி போட்டிகளையும் மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பேராவூரணி ஒன்றியம் புனல்வாசல் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாமினையும், காலகம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாமினை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.
பின்னர், சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்கு தளத்தில் மீனவர்களுக்கான பாய் மர படகு போட்டியினை தொடங்கி வைத்தார்கள். இப்படகு போட்டியில் 15 பாய்பமர படகுகள் கலந்து கொண்டன. கடலுக்குள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சென்று இப்படகு போட்டியினை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பார்வையிட்டார். தொடர்ந்து சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியினை பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியினை மதுக்கூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், ஒரத்தநாடு ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியினை ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும், திருவோணம் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியினை திருவோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்; பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கபாடி மற்றும் வாலிபால் போட்டிகளை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
ஒன்றிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் அடுத்து மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கு.பரசுராமன் (தஞ்சாவூர்), ஆர்.கே.பாரதிமோகன் (மயிலாடுதுறை), சட்ட மன்ற உறுப்பினர்கள் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), ம.கோவிந்தராசு (பேராவூரணி), மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், ஒருங்கிணைந்த பால் கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.மோகன், பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், நாகப்பட்டிணம் மண்டல மீன்வளத்துறை இணை இயக்குநர் ரீனாசெல்வி, மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.சுபாஷினி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் பி.என்.ராமச்சந்திரன், திருஞானசம்பந்தம், பட்டுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சுப்பிரமணியன், மதுக்கூர் பால்கூட்டுறவு தலைவர் துரைசெந்தில், முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் குருசேவ், பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுப.ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.