.

Pages

Thursday, October 26, 2017

அமீரகத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து கண் பார்வையற்ற இளைஞர் உலக சாதனை (படங்கள்)

அதிரை நியூஸ்: அக். 26
13,000 அடி உயரத்திலிருந்து பாராசூட்டில் குதித்த கண் பார்வையற்ற இமராத்தி இளைஞர் உலக சாதனை படைத்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு 24 வயது இளைஞராக இருந்தபோது நடைபெற்ற வாகன விபத்தில் தன் கண்பார்வைகளை இழந்தார் ஹாமித் முஹமது அல் தஹேரி. அல் அய்ன் நகரை பூர்வீகமாகக் கொண்ட ஹாமித் முஹமது தற்போது 35 வயதை எட்டிய நிலையில் அபுதாபி கஸ்டம்ஸில் அதிகாரியாக பணியாற்றுவதுடன் அல் அய்ன் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கும் மாணவராகவும் ஒருசேரத் திகழ்கின்றார்.

தினமும் தன் நண்பர்களின் உதவியுடன் சைக்கிளிங் செல்வதை வழக்கமாக கொண்டுள்ள ஹாமித் முஹமது, ஊனம் ஒரு தடையல்ல என்று பிற மாற்றுத் திறனாளிகளுக்கு உற்சாகமூட்டுவதற்காகவும், White Cane Safety Day (Oct 15) எனப்படும் ஊன்றுகோல் பாதுகாப்பு தினத்தையொட்டி விமானத்திலிருந்து சுமார் 13,000 அடி உயரத்திலிருந்து பயிற்சியாளர் உதவியுடன் பாராசூட் மூலம் குதித்த முதலாவது கண்பார்வையற்ற இமராத்தி என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

விரைவில் அமெரிக்காவின் ஹவாய் தீவில் சுமார் 20,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை நிகழ்த்தவுள்ள செய்தி கண்டிப்பாக குறைபாடுகளால் முடங்கிய உள்ளங்களை உற்சாகப்படுத்தி அவர்களையும் சாதிக்கத் தூண்டும் என நம்பிக்கை தெரிவிக்கின்றார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.