தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் ஃபுட் பால் கிளப் (WFC) நடத்தும் 8 வது ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மேலத்தெரு மருதநாயகம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.
தொடர் போட்டியில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை, பள்ளத்தூர், காரைக்குடி, நாகூர், கூத்தாநல்லூர், புதுக்கோட்டை, காரைக்குடி, பள்ளத்தூர், அத்திக்கடை, பொதக்குடி உள்ளிட்ட மொத்தம் 24 அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.
இன்று (ஏப்.27) நடந்த முதல் நாள் ஆட்டத்தில் பட்டுக்கோட்டை அணியினரும், கோட்டைப்பட்டினம் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 4-1 என்ற கணக்கில் 4 கோல் அடித்து பட்டுக்கோட்டை அணியினர் வெற்றி பெற்றனர்.
முன்னதாக, சிறப்பு அழைப்பாளர்களாக தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், ம.செ ஜபருல்லாஹ், கே.எஸ்.எம் பகுருதீன், கால்பந்தாட்ட பயிற்சியாளர் லியாகத் அலி, எஸ்.எஸ்.எம்.ஜி பசூல்கான், அதிரை அகமது ஹாஜா, அகமது அனஸ், ஜபருல்லா, அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து முதல் ஆட்டத்தை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியினை, அதிரை அகமது ஹாஜா தொகுத்து வழங்கினார். ஆட்டத்தின் நடுவர்களாக அதிரை ஷபானுதீன், அத்திவெட்டி நீலகண்டன் ஆகியோர் பொறுப்பு வகித்தனர்.
தொடர் போட்டியின் முடிவில் சாம்பியன் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும், வின்னர் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும், தொடர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகின்ற ஆட்டநாயகன், தொடர் நாயகன், சிறந்த கோல் கீப்பர் உள்ளிட்ட வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள், கேடயப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன. தொடர் போட்டி இன்று (ஏப்.27) தொடங்கி வரும் மே 11 ந் தேதி வரை நடைபெற உள்ளது.
முதல்நாள் ஆட்டத்தைக்காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் மைதானத்திற்கு வருகை தந்து ரசித்தனர்.
நாளை 2 ஆட்டங்கள்:
நாளை சனிக்கிழமை ஆட்டங்கள் நடைபெற உள்ளது. முதல் ஆட்டத்தில், அத்திவெட்டி அணியினரோடு, ஆலத்தூர் அணியினர் மோத உள்ளனர். 2 வது ஆட்டத்தில் அதிராம்பட்டினம் AFFA அணியினரோடு, நாகூர் அணியினர் மோத உள்ளனர். நாளைய ஆட்டம் சரியாக மாலை 4.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாலை நடக்கும் ஆட்டத்திக் அதிராம்பட்டினம் என்று குறிப்பிட்ட செய்தி ஆசிரியர் அதிராம்பட்டினத்தில் உள்ள அணிகளில் எந்த அனி விளையாடும்
ReplyDelete