தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் 63 வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி மாணவிகளுக்கு சனிக்கிழமையும், மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாக்களுக்கு, கல்லூரிச் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தார்.
மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் இசட். ஆனி விஜயா கலந்துகொண்டு 405 இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்திப் பேசியது;
பெண்கள் சாதனையில், பெண் இன மேன்மையில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மாணவிகள் எதிர்காலத்தில் சிறந்த பதவிகளில் அமர வேண்டும்' என்றார்.
மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.சுப்பையா கலந்துகொண்டு, 326 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், எம்.சி.ஏ, எம்.பி.ஏ, எம்.பில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்திப் பேசியது;
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். அவ்வாறு நடப்பவர்களே வாழ்க்கையில் மேன்மை அடைவார்கள். வாழ்க்கையில் முயற்சி என்பது முக்கியமானது. மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும். மாணவர்கள் வாழ்க்கையில் எந்த அளவிற்கு உச்சத்தை அடைந்தாலும், நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பின்பற்ற வேண்டும்' என்றார்.
இவ்விரு விழாக்களிலும் கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் வரவேற்று, கல்வி அறிக்கை, பட்டமளிப்பு உறுதிமொழி வாசித்தார்.
விழாக்களில் கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள். கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப்பணியாளர்கள் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.