அஜ்மானில் இருந்து செயல்படும் ஒரு வானொலியில் "Al Rabia Wal Nas" என்ற நேரலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் ராஸ் கைமாவிலிருந்து தொலைபேசி வழியாக கலந்து கொண்ட அலி அல் மஜ்ரோஹி என்ற ஏழை முதியவர், ஏறிவரும் விலைவாசிகளால் தங்களைப் போன்றவர்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிவித்தார் ஆனால் அந்நிகழ்ச்சியை வழங்கிய வானொலி அறிவிப்பாளர் அம்முதியவர் மனம் புண்படும்படியான வார்த்தைகளை நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் பெரும் அதிருப்தி ஏற்படுத்தியதை அறிந்த துபை மன்னரும் அமீரக பிரதமரும், துணை ஜனாதிபதியுமான ஷேக் முஹமது அவர்கள் அந்த ரேடியோ ஜாக்கியை உடனடியாக வேலையை விட்டு தூக்கியதுடன் சமூக மேம்பாட்டுக்கான அமைச்சகம் அம்முதியவருக்குத் தேவையான உதவிகளை 24 மணிநேரத்திற்கு நிறைவேற்றிவிட்டு தனக்கு அறிக்கை தர வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், சமூக மேம்பாட்டுக்கான அமைச்சர் திருமதி. ஹெஸ்ஸா பின்த் ஈஸா பு ஹூமைத் அவர்கள் அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு வரும் போது, குறைந்த வருமானமுடைய அமீரகத்தினர் பயன்பெரும் வகையிலான திட்டங்களுடன் வருமாறும் அறிவுறுத்தியிருந்தார்.
மேற்காணும் உத்தரவுகளின் அடிப்படையில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் குறைந்த வருமானமுடைய அமீரகத்தினருக்கான சிறப்புத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்குமாறு ஏழை முதியவர் அலி அல் மஜ்ரோஹி அவர்கள் துபை மன்னரால் கண்ணியப்படுத்தப்பட்டுள்ளார்.
அமீரக அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர் அலி அல் மஜ்ரோஹி என்ற பெரியவருக்கு சமூக மேம்பாட்டு அமைச்சகத்தில் 'சமூக நல ஆய்வாளர்' என்ற வேலையையும், ஒரு வீட்டையும் வழங்கி கண்ணியப்படுத்தினார் ஷேக் முஹமது பின் ராஷித் அவர்கள். மேலும், இன்றைய அமைச்சரவை தீர்மானத்தின்படி அடுத்த 3 வருடங்களுக்கு அமீரக ஏழைகளின் முன்னேற்றத் திட்டங்களுக்காக 11 பில்லியன் திர்ஹத்தையும் ஒதுக்கினார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்



No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.