அதிரை நியூஸ்: ஜூலை 05
ஹஜ் பயணிகளின் வசதிக்காக கூடுதல் விமானங்களை இயக்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனம்
இந்த வருட ஹஜ் பயணிகளின் நலன்களுக்காக எதிர்வரும் ஆகஸ்ட் 6 முதல் 30 வரை ஜித்தா மற்றும் மதினா விமான நிலையங்களுக்கு சென்று வர இருவழிகளிலும் 33 கூடுதல் விமான சேவைகளை வழங்கவுள்ளது எமிரேட்ஸ் விமான நிறுவனம்.
இந்த கூடுதல் சேவைகளின் மூலம் பாகிஸ்தான், செனகல், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, ஐவரி கோஸ்ட் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளிலிருந்து வரும் சுமார் 25,000 ஹஜ் பயணிகள் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் சேவைகளாக துபை விமான நிலையத்தில் துபையிலிருந்து ஹஜ் செல்லும் பயணிகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து துபை வழியாக டிரான்ஸிட்டில் ஹஜ் செல்லும் பயணிகளுக்கு உதவுவதற்காக சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்படுகின்றன. மேலும் ஹஜ் யாத்ரீகர்கள் ஒழு செய்வதற்கான வசதிகள், மீக்காத் எல்லையின் மீது விமானம் பறக்கும் போது ஹஜ் யாத்ரீகர்கள் இஹ்ராம் உடை அணிவதற்கு தேவையான முன்னறிப்புக்கள் செய்யவும் எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஹஜ்ஜில் இருந்து திரும்பும் போது ஹஜ் பயணிகள் தங்களுடன் 5 லிட்டர் புனித ஜம்ஜம் தண்ணீரை கொண்டு வரவும் அனுமதிக்கப்படுவர். அதேபோல் எகனாமி வகுப்பு பயணிகள் 35 கிலோ, பிஸ்னஸ் வகுப்பு பயணிகள் 40 கிலோ மற்றும் முதல் வகுப்பு பயணிகள் 50 கிலோ எடை வரை தங்களுடன் செக்-இன் பேக்கேஜ் எடுத்து வர அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.