அதிராம்பட்டினம், ஜூலை 02
சிறந்த சேவைக்கான மாநில அரசு விருது பெற்ற அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன் மற்றும் யூனானி மருத்துவர் டாக்டர் சி.செரின் பேகம் ஆகியோருக்கு பாராட்டு விழா அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் திங்கட்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஜூலை 1 ந் தேதி மருத்துவர் தினத்தை முன்னிட்டு, மாநில அரசு சார்பில் சிறந்த சேவையாற்றிய மருத்துவர்களுக்கு விருது வழங்கப்படும். அதன்படி, 2017 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு சிறந்த சேவை புரிந்த 486 மருத்துவர்களுக்கு விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன் மற்றும் யூனானி மருத்துவர் டாக்டர் சி.செரின் பேகம் ஆகியோருக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும், தமிழக மருத்துவக் கவுன்சில் சார்பில் சிறந்த மருத்துவர்களுக்கான விருது வழங்கும் விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் மருத்துவம், சேவைகளில் சிறந்து விளங்கிய 11 பேருக்கு நடப்பாண்டு மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. இதில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன் அவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இதையொட்டி, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு மகப்பேறு மருத்துவர் டாக்டர் கெளசல்யா தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் எஸ்.ஹாஜா முகைதீன் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பி.சீனிவாசன், எஸ்.கார்த்திகேயன், கலைவாணி, பேராவூரணி அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் டாக்டர் எச்.இர்ஷத் நஸ்ரின், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை பொதுநல மருத்துவர் டாக்டர் சர்மிளா மற்றும் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை செவிலியர்கள், பணியாளர்கள் கலந்துகொடண்டனர். முடிவில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன் ஏற்புரை வழங்கி அனைவருக்கும் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.