.

Pages

Saturday, May 31, 2014

அதிரை பைத்துல்மால் குரான் மாநாடு - இரண்டாம் நாள் நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை பைத்துல்மால் சார்பில் மாணவ மாணவிகளின் இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை திருக்குர்ஆன் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் திருக்குரான் மாநாட்டை நடத்துவது என்ற முடிவையடுத்து நமதூர் முகைதீன் ஜும்மாபள்ளி அருகில் திருக்குரான் மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. 

அதன் தொடர்ச்சியாக இன்று மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகளின் மார்க்க அறிவுத்திறன் போட்டிகளும் இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு  பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. பல்வேறு மார்க்க அறிஞர்களால் சிறப்பு சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநாடு நாளை நிறைவுபெற உள்ளது.













மல்லிப்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் !

மல்லிப்பட்டினத்தில் 4 முஸ்லிம் இளைஞர்கள் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நேற்று (30.05.2014) மல்லிப்பட்டினம் சென்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது, மாநில செயலாளர் அப்துல் சத்தார், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இலியாஸ், வடக்கு மாவட்ட தலைவர் இஷாக், திருவாரூர் மாவட்ட தலைவர் லத்திப், எஸ்.டி.டி.யூ மாநில தலைவர் பாருக் ஆகியோர் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர்.மேலும் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்து நலம் விசாரித்தனர்

ஜமாபந்தி : அதிரையர் பயன்படுத்திக்கொள்ள அறிய வாய்ப்பு !

தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ஜூன் 4-ம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்த ஜமாபந்தி ஜூன் 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர நாள்தோறும் காலை 9 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. பட்டுக்கோட்டை வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஜூன் 4 முதல் 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இந்த ஜமாபந்தியில் நில உடைமையாளர்கள் பட்டா மாறுதல், நிலங்கள் குறித்த எல்லை பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல், பொதுமக்கள் வீட்டுமனை, சாகுபடி நில ஒப்படை, முதியோர் உதவித்தொகை பெறுதல் ஆகிய கோரிக்கைகள் குறித்தும் வருவாய் தீர்வாய அலுவலரிடம் மனு கொடுத்து தீர்வு பெறலாம். வருவாய் தீர்வாயத்தின் நிறைவு நாளில் அந்தந்த வட்டங்களில் வருவாய் தீர்வாய அலுவலர்களால் விவசாயிகள், பொதுப்பணித் துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண் பொறியியல் துறை, புள்ளியியல் துறை சார்ந்த உள்கோட்ட அலுவலர்கள் அடங்கிய கூட்டம் நடத்தப்படும். இதில், பாசனம் தொடர்பான கருத்துரு, முன்மொழிவுகள், கோரிக்கைகள் ஆகியவற்றை அளிக்கலாம்.

குடிநீர் வினியோகம் கேட்டு காலிகுடங்களுடன் வீதியில் பெண்கள் !

அதிரை அருகில் உள்ள ஏரிபுறக்கரை கிராம நிர்வாக எல்லைக்குட்பட்ட 4 வது வார்டு ( குப்பம்  ) பகுதிகளில் சுமார் 300 பேர் வசிக்கின்றனர். இந்த பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் பற்றாக்குறையாக இருப்பதால் பெண்கள் காலிகுடங்களுடன் வீதிகளில் உலா வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் நம்மிடம் கூறுகையில்...
கடலோரப்பகுதியான எங்கள் பகுதியில் கடந்த 6 மாதமாக போதுமான குடிநீர் வழங்குவது கிடையாது. 1 கிலோ மீட்டர் தொலைவில் சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். மிகவும் சிரமமாக இருக்கிறது. சம்பந்தபட்ட ஏரிபுறக்கரை ஊராட்சி மன்ற நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள்  பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தவறினால் ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக கூறுகின்றனர்.


தஞ்சை எம்பி அதிரையில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு !

தமிழக முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமாகிய செல்வி. செயலலிதாவின் வேண்டுகோளுக்கு இணங்க நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கு. பரசுராமன் இன்று காலையில் அதிரையில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். கட்சியினர் எம்.பி.க்கு சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதில் வேட்பாளரோடு பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மலை அய்யன், அதிமுக கட்சியின் நகர கிளையின் பொறுப்பாளர்கள் - வார்டு செயலாளர்கள், பல்வேறு பிரிவுகளில் பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் சென்றனர்.





AFFA வின் நன்றி அறிவிப்பு !

இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் [ வரஹ் ]

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 11 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டிகள் தினமும் மாலை 5 மணியளவில் நமதூர் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் கடந்த 12 நாட்களாக சிறப்பாக நடைபெற்று வந்தது.
 
போட்டிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற செய்த இறைவனுக்கே எல்லா புகழும் உரித்தாகட்டும். மேலும் இந்த தொடர் போட்டிகள் வருடந்தோறும் வெற்றிகரமாக நடந்திட பொருளுதவி செய்து ஊக்கப்படுத்தும் நல்உள்ளங்களுக்கும், போட்டிகள் நடத்திட அனுமதி வழங்கிய அதிரை காவல்துறையினருக்கும், போட்டிகளை துவக்கி வைத்து தந்த சிறப்பு விருந்தினர்களுக்கும், பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும், தொடரில் கலந்து கொண்ட  அனைத்து அணியினருக்கும், நிகழ்சிகளை தொகுத்து வழங்கிய  தொகுப்பாளர்களுக்கும், ஆட்டத்தினை சிறப்பாக வழிநடத்தி சென்ற நடுவர்களுக்கும் - உதவி நடுவர்கள், பயற்சியாளர்கள், ஆலோசகர்கள், போட்டிகள் நடத்துவதற்கு மைதானத்தை தந்து உதவிய கிராணி குடும்பத்தாருக்கும், தொடர் போட்டிகளின் அன்றாட நிகழ்வுகளை உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நண்பர்களுக்கு உடனுக்குடன் எடுத்து சென்ற அதிரை நியூஸ் மற்றும் அதிரை வலைத்தளங்களுக்கும், மேடை, ஒலிஒளி, ஆட்டோ விளம்பர அறிவிப்பு ஆகியவற்றை சிறப்பாக அமைத்து தந்தவர்களுக்கும், விளையாட்டு ஆர்வலருக்கும் - பார்வையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதிரை AFFA நிர்வாகம் சார்பில் நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்

இப்படிக்கு,
நிர்வாகம்
அதிரை AFFA 

மரண அறிவிப்பு !

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த மர்ஹூம் S.V. முஹம்மது அலி வாத்தியார் அவர்களின் மூத்த மகனும், M. முஹம்மது அலியார், M. சம்சுல் ஷப்ரேஜ் ஆகியோரின் மருமகனும், முஹம்மது ஜமீல் அவர்களின் சகோதரருமாகிய வாப்பு மரைக்காயர் அவர்கள் இன்று காலை சிங்கப்பூரில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா சிங்கப்பூரில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Friday, May 30, 2014

துபையில் நடந்த அமீரக அனைத்து மஹல்லா செயற்குழு கூட்டம்.!

30/05/2014 இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் அமீரக AAMF அமைப்பின் செயலாளர் V.T.அஜ்மல்கான் அவர்கள் இல்லத்தில் AAMF துணைத் தலைவர் P.முகம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமையில் கூட்டம் இனிதாய் நடை பெற்றது. 

இக்கூட்டத்தில் ஊர்நலன் குறித்து பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. இன்னும்பல நலத்திட்டங்கள் விவாதிக்கப்படுவதாக இருந்தன. ஆனால் சில முஹல்லா நிர்வாகிகள் வராத காரணத்தால் விரிவாக பேசமுடியவில்லை.

ஆகவே இன்ஷா அல்லாஹ் வரும் கூட்டத்தில் அனைத்து மஹல்லாவின் நிர்வாகிகளும்  கலந்து ஊர்நலன் வேண்டிய நல்லமுடிவுகள் எடுக்கப்படும் என்பதாக தீர்மானிக்கப் பட்டது.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போன  மஹல்லா நிர்வாகிகள் அனைவர்களும் அவசியம் வரும் கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு தாங்களின் மேலான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
அமீர அனைத்து மஹல்லா  நிர்வாகிகள்
துபாய் கிளை    



அதிரை பைத்துல்மால் குரான் மாநாடு - முதல் நாள் நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை பைத்துல்மால் சார்பில் மாணவ மாணவிகளின் இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை திருக்குர்ஆன் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் திருக்குரான் மாநாட்டை நடத்துவது என்ற முடிவையடுத்து இன்று காலை நமதூர் முகைதீன் ஜும்மாபள்ளி அருகில் திருக்குரான் மாநாட்டின் முதல்நாள் நிகழ்ச்சி துவங்கியது.

இன்றைய முதல் நாள் நிகழ்ச்சியில்ன் நிரல்...
இன்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் மாணவ மாணவிகளின் மார்க்க அறிவுத்திறன் போட்டிகளும் இதில் வெற்றி பெரும் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறந்த மார்க்க அறிஞர்களால் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறும்.






மல்லிப்பட்டினம் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து பேசிய தமுமுக மாநில நிர்வாகிகள் !

இன்று மாநில அமைப்பு செயலாளர் அண்ணன் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்கள் தலைமையில் , மதுக்கூர் , அதிரை நிர்வாகிகள் மல்லிப்பட்டினம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தோம்.

ஜூம்மா தொழுகைக்கு பின்பு ஜமாத்தினர் , இளைஞர்கள் , ஊர் பெரியோர்கள் என திரளான மக்கள் பள்ளியில் அமர்ந்தனார். பிரச்சினையில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது என்பதினை ஜமாஅத் நிர்வாகிகள் மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா அவர்களிடத்தில் தெரிவித்தார்.

பின்பு அந்த மக்கள் மத்தியில் இப்பிரச்சினை சம்பந்தமாக நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதினை அண்ணன் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்கள் எடுத்துரைத்தார் ...அவர் பேசுகையில் பொறுமையாகவும் , அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பதினையும் இளைஞர்கள் ஜமாத்தார்களுக்கு கட்டுபட்டு நடக்க வேண்டும் , யாரும் தினிச்சையாக முடிவு எடுக்க வேண்டாம் என்பதையும் தெரிவித்தார் , பின்பு கலந்த ஆலோசனை நடைப்பெற்றது ஜமாத்தினருக்கு தமுமுகவின் முழு ஆதரவு , இப்பிரச்சினையில் இருதி வரை உங்களோடு இருப்போம் என்பதனையும் ராவுத்தர்ஷா அவர்கள் தெரிவித்தார்.

-மதுக்கூர் ஃபவாஸ் 


கோப்பையை கைப்பற்றியது தஞ்சை அணி ! பரிசுகளை அள்ளிக்குவித்தது அதிரை AFFA அணி !

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 11 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று [ 30-05-2014 ] மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்க இருக்கிறது.

இன்றைய இறுதி ஆட்டத்தில் தஞ்சை அணியினரும் , நாகூர் கெளதியா அணியினரும் மோதினார்கள். விருவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1 கோல் அடித்து  தஞ்சைஅணியினர் வெற்றிபெற்றனர்.

இன்றைய ஆட்ட நிகழ்சிகள் அனைத்தையும் SIS முஹம்மது இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். இன்று நடைபெற்ற ஆட்டங்களின் பிராதான அம்பயராக வாசுதேவனும், இவருக்கு உதவியாக இம்ரான், ருத்வான் ஆகியோர் சிறப்பாக கையாண்டனர்.

இறுதி ஆட்டத்தை தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், அதிரை காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன், தஞ்சை மாவட்ட கால்பந்து கழகத்தின் செயலாளரும், அதிரை AFFA அணியினரின் ஆலோசகருமாகிய திரு.கோபாலகிருஷ்ணன், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் விளையாட்டு ஆசிரியர் திரு. ராமச்சந்திரன், கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் அன்வர் அலி, லியாகத் அலி, AFFA தலைவர் செய்யது முஹம்மது புஹாரி, துணைதலைவர் முஹம்மது தமீம், செயலாளர் சமியுல்லாஹ், பொருளாளர் அபுல் ஹசன் சாதுலி, துணைச்செயலாளர் அஹமது அனஸ், ஒருங்கிணைப்பாளர்கள் சேக் தம்பி, இத்ரீஸ், அஸ்ரப், பாருக், தாரிக் ஆகியோர் இன்றைய இறுதி போட்டியில் வெற்றி பெற்ற முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்ற தஞ்சை மற்றும் நாகூர் அணியினருக்கு பதக்கங்களையும், கோப்பையையும் வழங்கி கெளரவித்தார்கள்.  தொடரில் சாதனை நிகழ்த்திய சிறந்த 10 வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் அதிரை AFFA, நாகூர், தஞ்சை ஆகிய அணிகள் சிறப்பு பரிசுகளை அள்ளிகுவித்தன.

முன்னதாக வரவேற்புரையை  SIS முஹம்மது வழங்க, நன்றியுரையை AFFA துணைதலைவர் முஹம்மது தமீம் வழங்கினார். இறுதி ஆட்டத்தைகாண விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் பெரும் திரளாக வருகை தந்து ரசித்தனர்.