இது குறித்து துணைத் தூதர் கயோகோ ஃபுருக்காவா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
ஜப்பான் நாட்டின் கல்வி, கலாசாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சார்பில் சர்வதேச மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மூன்றாண்டு தொழில்நுட்பம், வணிகம், ஃபேஷன் உள்ளிட்ட படிப்புகளுக்கும், 4 ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கும், பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு படிப்புக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதற்கு 1993 ஏப்ரல் 2-ஆம் தேதிக்கும் 1998 ஏப்ரல் 1-ஆம் தேதிக்கும் இடையில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்காலம். கல்வித்தகுதியாக பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த உதவித் தொகையை பெற சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதரகத்தில் நடைபெறும் தேர்வெழுத வேண்டும்.
இதற்கு ஜப்பான் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இறுதித் தேர்வு பின்னர் நடத்தப்பட்டு, 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும்.
இதற்கான விண்ணப்பம் தேனாம்பேட்டை செனாடோப் சாலையில் உள்ள ஜப்பான் துணைத் தூதரகத்தில் பெறலாம். மேலும் www.studyjapan.go.jp என்ற இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமணி
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
In this regards students who are Interesting welcome to ......kindly contact me by e mail abudpworld@gmail.com only Advises providing without any profit.
ReplyDelete