.

Pages

Sunday, May 18, 2014

அதிரை கால்பந்தாட்ட வீரர்களுக்கு முன்னாள் வீரர் அன்வர் வழங்கிய சிறப்பு பயிற்சி !

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 11 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டியின் முதல்நாள் ஆட்டம் இன்று [ 18-05-2014 ] மாலை முதல் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் துவங்க உள்ளது. இன்றைய ஆட்டமாக கண்டனூர் அணியினரும், கெளதியா ஸ்போர்ட்ஸ் கிளப் நாகூர் அணியினரும் மோத உள்ளனர்.

கடந்த வருடங்களை போல் அதிரை கால்பந்தாட்ட வீரர்களுக்கு கால்பந்தாட்ட வீரர்களும், பல சாதனைகளை நிகழ்த்தி நமதூருக்கு பெருமை சேர்த்து தந்தவர்களுமாகிய அன்வர் அலி, லியாகத் அலி ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். போட்டி நடைபெறும் மைதானத்தில் தினமும் அதிகாலையில் நடைபெற இருக்கிற சிறப்பு பயிற்சியில் ஏராளமான வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். வீரர்களுக்கு தேவையான ஆலோசனைகளை கூறி அதிக தன்னம்பிக்கையையும் வளர்த்து வருகின்றனர். இன்றைய பயிற்சியில் கலந்துகொண்ட வீரர்களுக்கு கொண்டைக்கடலை, முட்டை ஆகியன வழங்கப்பட்டது.








3 comments:

  1. AFFA விைலயாட்டு வீரர்கள்களுகு வாழத்துகள் பாராட்டுகள்

    ReplyDelete
  2. அப்பாதுைற ஜாமால் மகன் 2 புைகப்படம் சூப்பர் ஸ்டில் சிறந்த விைலயாட்டு வீரராக மனமார வாழ்த்துகிேறன்

    ReplyDelete
  3. Good to see you guys... Naina kaka and Ashraf also back to team... we will expect some good news from our team InSha Allah..

    All the best guys!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.