தஞ்சை மாவட்ட குத்துசண்டை கழக பொதுசெயலாளர் ஜெலேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தஞ்சை, நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டளவில் போட்டியாளர்கள் பங்கேற்ற உடல் எடை அடிப்படையிலான உடற்பயிற்சி போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தேர்வானவர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆசியளவில் வலுதூக்கும் போட்டியில் தங்கம் பதக்கம் பெற்ற மெ.மு. அப்துல் ரஹூப் அவர்களுக்கு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுக்கோட்டை நகராட்சி தலைவர் S.R. ஜவகர் பாபு, லயன் சங்க தலைவர் அஹ்மது, லயன் சங்க செயலாளர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி, சு. பாஸ்கர், தங்கதுரை, பழஞ்சூர் செல்வம், மதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக தஞ்சை மாவட்ட ஆணழகன் சங்க செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்த, நன்றியுரையை தஞ்சை மாவட்ட ஆணழகன் சங்க துணைசெயலாளர் நஜ்முதீன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
போட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கங்களை வென்று குவிக்கும் அப்துல் ரஹூப் மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteபோட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கங்களை வென்று குவிக்கும் அப்துல் ரஹூப் மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்
ReplyDelete