.

Pages

Saturday, May 31, 2014

அதிரை பைத்துல்மால் குரான் மாநாடு - இரண்டாம் நாள் நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை பைத்துல்மால் சார்பில் மாணவ மாணவிகளின் இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை திருக்குர்ஆன் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் திருக்குரான் மாநாட்டை நடத்துவது என்ற முடிவையடுத்து நமதூர் முகைதீன் ஜும்மாபள்ளி அருகில் திருக்குரான் மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. 

அதன் தொடர்ச்சியாக இன்று மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகளின் மார்க்க அறிவுத்திறன் போட்டிகளும் இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு  பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. பல்வேறு மார்க்க அறிஞர்களால் சிறப்பு சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநாடு நாளை நிறைவுபெற உள்ளது.













6 comments:

  1. அன்புள்ள சகோதரர்களே.
    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

    உலக மக்களிடம் ஆடம்பர வாழ்க்கை உச்சிக்கு போய்க் கொண்டிருக்கு, ஆடம்பரம் இஸ்லாத்திற்கு புறம்பானது. ஆடம்பரத்தை அல்லாஹ் வெறுக்கின்றான்.

    ஆடம்பரம், பெருமை, விளம்பரம் என்ற பெயரில் ஷைத்தான் பல வழிகளில் நம் சமூதாய மக்களின் வாழ்க்கையில் நுழைந்து கொண்டு இருக்கின்றான்.

    நடந்து முடிந்த கல்யாணங்களில் எவ்வளவு ஆடம்பரம், பெருமை, விளம்பரம், - கல்யாணநிகழ்ச்சிகள், அதிகவிலையில் பத்திரிகை, அளவுக்கு அதிகமான உணவு விரயம், -அஸ்தகுபிருல்லாஹ்- இஸ்லாம் இப்படியா செய்யச் சொல்லுது?

    பள்ளியில் நிக்காஹ் எழுதும்போது பெண்ணுக்கு இத்தனை கிராம் தங்கம் போடுகிறோம் என்று மாப்பிள்ளை வீட்டார் சொல்லுகிறார்களாம், (இது எங்கள் காதுகளுக்கு விழுவது கிடையாது, கேள்விப்பட்டேன்.)

    இதுபோல் மணமகனுக்கு 25 லட்சத்திற்கு மனை வாங்கி அதில் 50 லட்சம் செலவில் எல்லா வசதிகளோடும் கீழும் மேலும் வீடு கட்டி கொடுக்கிறோம்,

    ஏழு நாளைக்கு நல்லமாதிரியா தோழன் சாப்பாடு கொடுக்கிறோம், மாப்பிள்ளை வீட்டுக்கு காலை பசியாற பத்தாயிரம் இடியாப்பம், பத்தாயிரம் மைதா பரோட்டா, ஆயிரம் முட்டையில் வட்டுலப்பம், நூறு சகனுக்கு கடப்பாசி, இருபது கிலோ ரவாவில்-வறுத்த முந்திரி பருப்பு-உலர்ந்த திராட்சை போட்ட ரவா கஞ்சி, முன்னூறு கிலோ ஆட்டு இறைச்சியில் ஆனம்-குருமா, தனியாக கிட்னி-ஈரல்-செவரொட்டி பிரட்டல் இவைகளெல்லாம் மாப்பிள்ளை வீட்டார்கள் கேட்டுகொண்டதின் பேரில் நாங்கள் கொடுத்தோம். என்று சொல்ல பெண் வீட்டாரையும் அனுமதிக்க வேண்டும். வெளியூர்களில் பெண்வீட்டாருக்கும் அனுமதி உண்டு.– சமூக செம்மல்களே நமதூரில் பெண்வீட்டாருக்கு இப்படி சபையில் பேச அனுமதிப்பீர்களா?

    இந்த ஊரில் பல இடங்களில் மாப்பிள்ளை வீட்டார்கள் பெண் வீட்டாரை அடக்கி ஆளுவதற்கு முயலுகின்றனர்.- இஸ்லாம் இப்படியா செய்யச் சொல்லுது?

    சமூக சீர்கேடுகள் முற்றி விட்டன, ஆண்கள்-பெண்கள் பயம் இல்லை, பொது இடங்களில் ஆண்கள் எப்படி இருக்கணும் பெண்கள் எப்படி இருக்கணும், பள்ளிக் கூடம் விட்டு போகின்ற மாணவ/மாணவிகளிடம் ஒழுக்கம் கிடையாது.-இப்படியே போக இஸ்லாம் அனுமதிக்குதா? இவைகளை யார் எடுத்துச் சொல்வது? குர்ஆன் மாநாடு நடத்தும் அதிரை பைத்துல்மாலே, நீங்கள் எடுத்துச் சொல்லக் கூடாதா?

    வஸ்ஸலாம்.
    ஹுமைராஹ் சுல்தானாஹ்.

    ReplyDelete
  2. மாநாட்டிற்கு பெயர் குர்ஆன் மாநாடு அதில் பங்கு பெற்றவர்களை எல்லாம் பார்க்கும் போது பெயர் தவறுதலாக வைத்துப்போல் தோன்றுகிறது

    ReplyDelete
  3. மாநாட்டிற்கு பெயர் குர்ஆன் மாநாடு என்று தவறுதலாக வைத்துப்போல் தோன்றுகிறது என்று
    மேடையில் அமர்ந்து இருபவர்களைவைத்து கூறுகீறீர்கலா ? இல்லை போட்டியில் கலந்து கொண்டவர்களைவைத்து கூறுகீறீர்கலா ????

    ReplyDelete
  4. எனக்கு எல்லாமே நல்லாத்தான் இருக்குது.

    ReplyDelete
  5. மேடையில் அமர்ந்து இருப்பவர்களை

    ReplyDelete
  6. போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் பெற்ற குழந்தைகளுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.