.

Pages

Monday, May 19, 2014

அதிரை WCC நடத்திய கிரிக்கெட் தொடர் போட்டியில் கோப்பையை தட்டிச்சென்றது பாண்டிச்சேரி அணி !

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் (WCC) சார்பாக கடந்த 18 ஆண்டுகளாக நடத்தி வருகின்ற மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று மாலை மேலத்தெரு மருதநாயகம் திடலில் சிறப்பாக துவங்கியது. கடந்த சில நாட்களாக பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தந்த தலைசிறந்த 16 அணிகள் பங்குபெற்று விளையாடி வந்தனர்.

தொடர் போட்டியின் இன்றைய இறுதி ஆட்டத்தில் சரவணா ஸ்போர்ட்ஸ் கிளப் பாண்டிச்சேரி அணியினரும், தஞ்சை அணியினரும் மோதினார்கள். இதில் டாஸ் வென்ற பாண்டிச்சேரி அணியினர் பேட்டிங் செய்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாண்டிச்சேரி அணியினர் வெற்றி பெற்றனர்.

இதைதொடர்ந்து வெற்றி பெற்ற அணியினருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் விளையாட்டு ஆசிரியர் திரு. ராமச்சந்திரன், நிஜாம் மட்டன் ஸ்டால் உரிமையாளர் ராஜிக், மலேசியா உணவக அதிபர் சகாபுதீன், சாதிக், தாயகம் திரும்பியுள்ள வெளிநாடு வாழ் சகோதரர் ஜாஹிர் ஹுசைன் ஆகியோர் பரிசுகளை வழங்கி கெளரவித்தார்கள்.

முதல் பரிசு ரூ 30,018 அணியினருக்கும், இரண்டாம் பரிசு ரூ 25,018 தஞ்சை அணியினருக்கும், மூன்றாம் பரிசு ரூ 20,018 அதிரை WCC அணியினருக்கும், நான்காம் பரிசு ரூ 15,018 அதிரை KMC அணியினருக்கும் வழங்கபட்டது.

தொடர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இன்றைய இறுதி ஆட்டத்தையும், பரிசளிப்பு நிகழ்ச்சியையும் காண ஏராளமான கிரிக்கெட் பிரியர்கள் வருகைதந்து ரசித்தனர்.





4 comments:

  1. Win panna Teammukku en valthukkal...

    ReplyDelete
  2. வெற்றி பெற்ற அணியினருக்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பரிசு வழங்கிய மலேஷியா தொழில் அதிபர் சஹாபுதீன் மச்சானுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.