.

Pages

Thursday, May 29, 2014

அதிரை பைத்துல்மாலின் அவசர வேண்டுகோள் !

அதிரை பைத்துல்மாலின் அவசர வேண்டுகோள்.

கடந்த 20 வருடங்களாக அதிரையில் செயல்பட்டுவரும் "பைத்துல்மால்" பல்வேறு சேவைகளைச் சிறப்பாகச் செய்து வருகிறது.

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 30,31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் திருக்குர்ஆன் மாநாடு நடத்துகிறது. முன்னதாக குழந்தைகள், சிறார்கள், இல்லத்தரசிகள் ஆகியோருக்கு குர்ஆன் சார்ந்த பல்வேறு போட்டிகளையும் அறிவித்துள்ளது.

இதுவரை நடந்த 13 மாநாடுகளில் பங்கேற்றதைவிட  கூடுதலான பேர் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டனர். ஒருபக்கம் மகிழ்ச்சி என்றாலும், இன்னொரு பக்கம் சற்று கவலையையும் தந்துள்ளது.

அதாவது, சிறார், சிறுமிகளுக்கான போட்டிகளில்  தேர்வானோர் மட்டுமே 925 பேர். இவையன்றி அல்குர்ஆன் அறிவமுதப் போட்டி, பேச்சுப்போட்டி, கிராஅத் போன்றவற்றிலும் பலர் பரிசுக்குரியவர்களாகத் தேர்வாகி உள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

கேளிக்கை, விளையாட்டு, சினிமா, சீரியல் என்றிருந்தவர்களை கடந்த ஒருமாதமாக குர்ஆனை வாசிக்க வைத்த வகையில் பைத்துல்மாலின் இந்த நிகழ்ச்சியின் நோக்கங்கள் வெற்றி பெற்றுள்ளது. எனினும், ஆர்வமாகக் கலந்து கொண்டவர்கள் மகிழ்வுறும்படியான பரிசுகளையும் வழங்க வேண்டும். எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக பரிசுகள் தேவை என்பதால், வெளிநாடுவாழ் அதிரை மக்களிடமிருந்து அதிரை பைத்துல்மால் பரிசுகளுக்கான ஸ்பாப்சர்ஷிப்பை எதிர்பார்க்கிறது.

அவ்வகையில் ஜித்தா,ரியாத்,தமாம், துபாய், அபுதாபி,குவைத் மற்றும்பிற நாடுகளிலுள்ளோர் அந்தந்த கிளை நிர்வாகிகளிடம் தங்களால் முடிந்த நன்கொடையை மனமுவந்துவழங்கி ஊக்குவிக்கும்படி பைத்துல்மால் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ளோர் என்னிடமோ அல்லது S.M.A. சாகுல் ஹமீது அவர்களிடமோ தந்தால், இன்ஷா அல்லாஹ் நாளைக்குள் அனுப்பிவிட வசதியாக இருக்கும்.

நேரடியாக அதிரை பைத்துல்மால் வங்கிக் கணக்கிற்கும் அனுப்பலாம்.
வங்கி கணக்கின் விவரம் :

அதிரை பைத்துல்மால்
C/A. No. 115-53-332 ( Current Account )
தனலக்ஷ்மி பேங்க்
அதிராம்பட்டினம் கிளை
---------------------
ADIRAI BAITHULMAL
Current Account No. 115-53-332
Dhanalkhshmi Bank
Adirampattinam Branch

குறிப்பு: அவசரம்கருதி இப்பதிவை அதிகமாக Share செய்து தங்களது நண்பர்களுக்குப் பரிந்துரைக்கவும். அதிரை சமூக வலைப்பூக்களிலும் பதியும்படி தளநிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
N. ஜமாலுதீன்
ABM துபாய்கிளை செயலர்

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.