இதுகுறித்து அப்பகுதியினர் நம்மிடம் ஆதங்கத்தோடு கூறுகையில்...
'நடந்த சம்பவம் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் சிறுவர் சிறுமிகள் அதிகளவில் புழங்கி வருகின்றனர். இன்று ஆட்டை கடித்து குதறிய வெறிநாய்கள் நாளை சிறுவர் சிறுமிகளை கடித்து குதறாது என்பதற்கு என்ன உத்திரவாதம் ? கடந்த சில வருடங்களாக இந்த பகுதியில் நாய்கள் தொல்லை இல்லாமல் இருந்து வந்தது. சமீபகாலமாக மீண்டும் அதிகளவில் நாய்கள் புழக்கம் காணப்படுகிறது.
அதிகாலை நேரங்களில் தொழுவதற்காக பள்ளிகளுக்கு செல்வோருக்கு இடையூறாக இருந்து வருகிறது. அதிரையில் மீண்டும் அதிகரித்துள்ள நாய்கள் நடமாட்டத்தை குறைக்க அதிரை பேரூர் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.
பாவம், என்ன இது.
ReplyDeleteஸஹீஹுல் புகாரி 1829. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினஙகள் தீஙகு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும். இதை இப்னு உமர் (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
ReplyDeleteVolume:2,Book:28.