இன்றைய ஆட்டத்தின் சிறப்பு விருந்தினராக தஞ்சை மாவட்ட கால்பந்து கழகத்தின் செயலாளரும், அதிரை AFFA அணியினரின் ஆலோசகருமாகிய திரு.கோபாலகிருஷ்ணன் வருகை தந்து சிறப்பித்தார்.
இன்றைய முதல் ஆட்டத்தில் பொதக்குடி அணியினரும், ஆலத்தூர் அணியும் மோதின. இதில் டாஸ் முறையில் பொதக்குடி அணி வெற்றி பெற்றதாக அறிவிப்பு செய்யப்பட்டது.
இதையடுத்து இரண்டாவது ஆட்டம் துவங்கியது. இதில் அதிரை AFFA அணியினரும், மேலநத்தம் அணியினரும் மோதினார்கள். இதில் ஆட்டம் துவங்கிய சில மணி துளிகளில் அணியின் நட்சத்திர வீரர் ராஜிக் முதல் கோலை போட்டார். அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் அஸ்ரப் இரண்டு கோலை போட்டு அணியை வெற்றி பாதைக்கு இழுத்துசென்றார். இறுதியாக ஆசிப் ஒரு கோலை போட்டார். இறுதியில் அதிரை AFFA அணியினர் 4 கோல்கள் அடித்து வெற்றியை இலகுவாக தட்டிச்சென்றனர்.
முன்னதாக அதிரை AFFA அணியினர் பங்கு பெற்ற இரண்டாவது ஆட்டத்தை சிறப்பு விருந்தினராக தஞ்சை மாவட்ட கால்பந்து கழகத்தின் செயலாளரும், அதிரை AFFA அணியினரின் ஆலோசகருமாகிய திரு.கோபாலகிருஷ்ணன், நிகழ்ச்சி தொகுப்பாளர் அஹமது ஹாஜா, AFFA வின் தலைவர் செய்யது முஹம்மது புஹாரி, துணைதலைவர் முஹம்மது தமீம், செயலாளர் சமியுல்லாஹ், பொருளாளர் அபுல் ஹசன் சாதுலி, துணைச்செயலாளர் அஹமது அனஸ், ஒருங்கிணைப்பாளர்கள் சேக் தம்பி, இத்ரீஸ், அஸ்ரப், பாருக், தாரிக், கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் அன்வர் அலி, லியாகத் அலி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
வழக்கம் போல் ஆட்ட நிகழ்சிகள் அனைத்தையும் அஹமது ஹாஜா இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். இன்று நடைபெற்ற ஆட்டங்களின் பிராதான அம்பயராக முன்னாள் கால்பந்தாட்ட வீரர் அன்வர் அலி, வாசுதேவன் ஆகியோர் சிறப்பாக கையாண்டனர். இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.
நாளைய ஆட்டமாக இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற பொதக்குடி அணியினரும், இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற்ற அதிரை AFFA அணியும் மோத இருப்பதாக நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தனர்.
Affa அணி நாளை வெற்றிபெறுமா ???????? இன்ஷா அல்லாஹ்
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் AFFA அணி நாளையும் ெெவற்றி ெபறும்
ReplyDeleteAppadiya
ReplyDelete