அல் மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகமும்,ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஸன் நிறுவனத்தின் செயலாளருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனி தலைமையில் இடம்பெற்ற இவ் வரலாற்று சிறப்புமிக்க விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஸன் நிறுவனத்தின் பணிப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
இங்கு சட்டத்தரணி அப்துல் ஜவாத் மண்டபத்தின் பெயர்ப் பலகை அதிதிகளினால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டு மண்டபம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது காத்தான்குடியின் கல்வி, கலாசார, சமூக மற்றும் பாதுகாப்பு போன்ற நல்ல பல பொது விடயங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயலாற்றி வரும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதித்தலைவரும், முன்னாள் காத்தான்குடி நகர சபை நகர பிதாவுமான சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் மற்றும் அரை நூற்றாண்டு காலப்பகுதிக்குமதிகமாக காத்தான்குடியின் மார்க்க விடயங்களிலும், ஜாமியதுல் பலாஹ் அரபிக்கலாசாலையின் வளர்ச்சியிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் சேவையாற்றிவரும், ஜாமியதுல் பலாஹ் அரபிக்கலாசாலை முதல்வர் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஷெய்குல் பலாஹ் எம்.ஏ.அப்துல்லாஹ் றஹ்மானி ஆகியோரின் சேவை நலனை பாராட்டி அவர்கள் இருவருக்கும் அல் மனார் நிறுவனத்தின் நிருவாகிகளால் பொன்னாடை போர்த்தப்பட்டு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் நினைவுச்சின்னமும், புனித மக்காவில் உம்றா கடமை நிறைவேற்றுவதற்கான வவுச்சரும் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத், ஷெய்குல் பலாஹ் எம்.ஏ.அப்துல்லாஹ் றஹ்மானி ஆகியோர் தொடர்பான சிறப்புரையை ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கவிமனி மௌலவி எம்.எச்.எம்.புகாரி பலாஹி நிகழ்த்தினார்.
அத்தோடு அல் மனார் அறிவியற் கல்லூரியில் ஒவ்வொறு மாதமும் சிறந்த மாணவர்களை தெரிவு செய்யும் போட்டியில் ஏப்ரல் மாதம் சிறந்த மாணவர்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அதிதிகளினால் பிரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரயின் இஸ்லாமிய பீடத்தின் பிரதி பீடாதிபதி பாரூக் அஸ்ஹரி, அல் மனார் நிறுவனத்தின் பணிப்பாளர் இஸ்மாயில், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள், உலமாக்கள், ஊர்பிரமுகர்கள், வர்த்தகர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், அல் மனார் நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
தகவல் : அபூ ஒஸாமா
Source : http://zajilnews.lk/?p=9889
அதிரை மார்க்க அறிஞர் அப்துல்லா ரஹ்மானி அவர்கள் இலங்கையில் கெளரவிக்கப்பட்டார் என்பது ஊருக்கு கிடைத்த பெருமையாக நான் கருதுகிறேன்.
ReplyDeleteஅதிரை வரலாற்றில் இவர்கள் பெயரும் இல்லாமலா !
ReplyDeleteஅதிரையின் புகழ் மணக்க ஆற்றிவரும் சேவை கண்ணியப்படுத்தப்பட்டுள்ளது.
எதிரியும் மனமும் புண்பட பேசாத உயர்ந்தவர்கள்.
அதுவும் தவறு யாரையும் எதிரியாகப் பார்க்கத்தெரியாதவர் என்று சொல்லுதலே சிறப்பு.
உண்மை உரைக்க அஞ்சாதவர்கள்.
நேர்மை உயிராய் மதிப்பவர்கள்.
நீடூழி பல்லாண்டு நலமுடன் வாழ துவா செய்வதன்றி வேறு அறியேன்.
அதிரை மார்க்க அறிஞர் அப்துல்லா ரஹ்மானி அவர்கள் இலங்கையில் கெளரவிக்கப்பட்டார் என்பது ஊருக்கு கிடைத்த பெருமையாக நான் கருதுகிறேன்.
ReplyDeleteஅதிரை மார்க்க அறிஞர் அப்துல்லா ரஹ்மானி அவர்கள் இலங்கையில் கெளரவிக்கப்பட்டார் என்பது ஊருக்கு கிடைத்த பெருமையாக நான் கருதுகிறேன்.
ReplyDeleteஅதிரை மார்க்க அறிஞர் அப்துல்லா ரஹ்மானி அவர்கள் இலங்கையில் கெளரவிக்கப்பட்டார் என்பது ஊருக்கு கிடைத்த பெருமையாக நான் கருதுகிறேன்.
ReplyDeleteஅதிரை மார்க்க அறிஞர் அப்துல்லா ரஹ்மானி அவர்கள் இலங்கையில் கெளரவிக்கப்பட்டார் என்பது ஊருக்கு கிடைத்த பெருமையாக நான் கருதுகிறேன்.
ReplyDelete