.

Pages

Sunday, May 25, 2014

அன்புள்ள மாணவச் செல்வங்களே!


 தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

வெற்றி பெற்ற உங்களை “ஆழி சூழ்ந்த இவ்வுலகில் ஆழமான கடலடியில் கிடைத்த அழகான நன்முத்து என்று போற்றி மகிழ்கின்றேன்.

இனி நீங்கள் நன்றாக படித்து பல படிகளை மிகவும் கவனமாக கடந்து அடியெடுத்து வைக்கப் போகும் நாட்கள் எல்லாம் பொன் போன்ற நாட்களே, அந்த நாட்களோடு உங்களுடைய ஒத்துழைப்பும் சரியான முறையில் அமைய எல்லாம் வல்ல ஏக நாயன் நம் அனைவரோடும் துணை நிற்பானாக, ஆமீன்.

அதே வேளையில் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கின்ற மாணவச் செல்வங்களே, கொஞ்சம் இப்படி திரும்பிப் பாருங்கள்.

உங்களை நேற்றைய முன் தினம் வந்து பார்க்க முயற்ச்சித்தேன் நான் பார்க்கக் கூடிய சூழலில் நீங்கள் இல்லை, நேற்றும் முயற்ச்சித்தேன் நிலைமை சரியில்லை, இன்று நீங்கள் கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது தெளிவுடன் இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேறுவது என்பது ஒவ்வொரு மாணவ/மாணவியின் கல்வி வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்.

ஆனால் ஒரு சில மாணவர்களும் மாணவிகளும் இத்தேர்வில் வெற்றி பெறாமல் போய்விட்டால், அவர்கள் தங்கள் வாழ்க்கையிலேயே தோற்றுபோய் விட்டதாக கருதுகிறார்கள், அப்படி கருதத் தேவையில்லை. தாழ்வு மனப்பாண்மை தேவையில்லை. விரக்தியடையத் தேவையில்லை. தற்கொலை எண்ணம் தலைதூக்கிடத் தேவையில்லை.

தற்கொலை செய்யும் அளவுக்கு துணிவு இருக்கும்போது, உங்களால் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்று வாழ்க்கையில் சாதிக்க முடியாதா?

பெற்றோர்கள் உங்கள் மீது அளவிலாத அன்பும் நம்பிக்கையும் வைத்திருப்பவர்கள். உங்கள் நலம் நாடுபவர்கள். உங்களைத் திட்டினாலும் அதுவும் உங்கள் நன்மைக்குத் தான்! அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

தேர்வில் வெற்றி பெறவில்லையா? உணர்ச்சி வசப் படுகிறீர்களா? தனிமையை நாட வேண்டாம். உங்கள் நலம் நாடும் நண்பர்களுடன் சேர்ந்திருங்கள்.

உங்கள் தந்தை இடம் சென்று உங்கள் நிலையை எடுத்துச் சொல்ல தயங்க வேண்டாம், மீண்டும் தேர்வு எழுதுகிறேன், என்று பணிவுடன் சொல்லுங்கள்.

அல்லது ஒரு கால் உங்களுக்கு விருப்பம் இல்லாமலேயே ப்ளஸ்-டூ வில் சேர்க்கப் பட்டிருந்தால் வேறு என்ன துறையில் நீங்கள் ஈடுபட விருப்பம் என்பதையும் உங்கள் பெற்றோரிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லி அவர்களை சமாதானப் படுத்துங்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பல்லாயிரக் கணக்கான வாய்ப்புகள் உங்களுக்கு முன்னே காத்திருக்கும் போது வாழ்க்கையையே முடித்துக் கொள்ள நாடுதல் புத்திசாலித் தனமே இல்லை.

பள்ளிப் படிப்பில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருமே வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அல்ல! பள்ளிப் படிப்பில் தோல்வி அடைந்தவர்கள் எல்லோருமே வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களும் அல்ல!

நீ ஒரு விதை! இனி மேல் தான் நீ விண்ணை நோக்கி கிளை பரப்பும் மரமாக எழுந்திட வேண்டியுள்ளது! நீ ஒரு சுரங்கம்! இனி மேல் தான் உனக்குள் இருப்பதை நீ தோண்டி எடுத்திட வேண்டியுள்ளது! நீ ஒரு பட்டை தீட்டப்படாத வைரம்! இனி மேல் தான் உன்னை நீயே பட்டைத் தீட்டப் புறப்பட வேண்டும்.

நீ இருட்டில் விடப் பட்டதாக எண்ணாதே! ஒரே ஒரு அடி முன்னே எடுத்து வை!
வெளிச்சம் உன்னை அரவணைக்கும்!

***
பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகள் தோல்வி அடைந்து உங்களிடம் வரும் போது -
தஞ்சம் புகும் குஞ்சுகளைத தன் இறக்கைகளுக்குள் உள் வாங்கிக் கொள்ளும்
ஒரு தாய்க்கோழி போல் நடந்து கொள்ளுங்கள்!
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தானே எல்லாம்!
அவர்கள் வேறு எங்கு செல்வார்கள்? அரவணைத்துக் கொள்ளும் தருணம் இதுவே!
நாம் ஒன்றும் குறைந்து போய்விட மாட்டோம்!
ஆசிரியர்கள் பெற்றோர்களைப்போல் நடக்கணும்!
பெற்றோர்கள் ஆசிரியர்களைபோல் நடக்கணும்!
நாமும் வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்தவர்கள் தானே.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com




5 comments:

  1. முன்பெல்லாம் பைல் ஆனால் திரும்ப ஒருவருடம் படிக்கணும் ஆனால் தற்போது விடுபட்ட பாடங்களை ஜூனில் எழுதி அதேவருடம் படிக்கலாம் 'தோல்வி' Does not a matter ......

    ReplyDelete
  2. நல்ல ஒரு ஆக்கம்....

    ReplyDelete
  3. எனக்கு ஞாயிற்று கிழமை என்றாலும் விடுமுறை கிடையாது.
    சூப்பர் பதிவு.
    பள்ளியின் பிள்ளைகளே. உங்களுக்கு இப்படி யாராவது ஆறுதல் வாழ்த்துக்கள் சொன்னதுனன்னா ?
    சொல்லுங்கள்.

    ReplyDelete
  4. மாணவர்களுக்கு ஜமால் காக்கா வழங்கியுள்ள அறிவுரை அருமை.

    ஆகவே துணிந்து நில்.! தொடர்ந்து செல்.! தோல்வி கிடையாது.!

    ReplyDelete
  5. இப்போ மாணவச் செல்வங்கள் எல்லோரும் நல்லவராகிட்டாங்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.