.

Pages

Monday, May 12, 2014

அதிரை 11 வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடால் டேங்கர் வாகனத்தில் குடிநீர் விநியோகம் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பட்டால் அந்த பகுதியின் வார்டு உறுப்பினர் அன்சர்கான் அப்பகுதி மக்களுக்கு டேங்கர் வாகனத்தின் மூலம் இன்று பகல் குடிநீரை விநியோகித்தார். அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான பொதுமக்கள் காலிகுடங்களை எடுத்து வந்து குடிநீரை பெற்றுச்சென்றனர்.

இதுகுறித்து 11 வது வார்டு உறுப்பினர் அன்சர்கான் நம்மிடம் கூறுகையில்...
கடந்த 4 நாட்களாக எங்கள் பகுதிக்கு பேரூராட்சியின் மூலம் வழங்கிவரும் குடிநீர் தரப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் வாழும் மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்துவந்தனர். இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு தனியார் வாகனத்தின் மூலம் குடிநீரை விநியோகிக்க, ஒரு டிரிப் ரூபாய் 1500 செலவில் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம்.

முன்கூட்டியே இது குறித்து அதிரை பேரூராட்சியின் கவனத்திற்கு எடுத்தும் செல்லப்பட்டது. எங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகிப்பதில் மேலும் தாமாதமானால் மக்களை திரட்டி சாலைமறியலில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை' என்றார்.






8 comments:

  1. மக்கள் பிரச்சனையும் தண்ணீர் பிரச்சனையும் தீர வேண்டுமானால், முதலில் அரசியலில் உள்ள பிரச்சனைகளை களைய வேண்டும்.

    ReplyDelete
  2. மற்றவார்டுகளிலும் இதே நிலைமை தான், இனி டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய பேரூராட்சி முடிவு செய்யும் அதோடு ஸ்பெஷல் டீளும் நடக்கும்.

    மக்கள் பணத்தை கொள்ளைஅடிக்க அதிகாரிகளுக்கு சொல்லவா வேண்டும்!

    மின்சாரம் எப்படி வருதோ அதே போல தான் டேங்கர் லாரி தண்ணீரும் வரும். தொலை நோக்கு திட்டம் தமிழக அரசிடம் எதுவும் கிடையாது.

    ReplyDelete
  3. அன்சர் காகா கச்சலே கட்டிடாப்லே

    இனி முன் வச்ச காலே பின் வாங்க மாட்டப்லே

    ReplyDelete
  4. தண்ணீர் தேவை நாளுக்குநாள் அஅதிகரிக்குது குறைந்தபட்சம் குடிநீர்
    பிறட்ச்சனைக்காகவது தீர்வு ஏற்பட்டால்
    அல்லாஹ்விற்க்கு நன்றி செலுத்துவோம்






    பிஸ்மில்லா....
    وَإِذِ اسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ ۖ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا ۖ قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ ۖ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ
    மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, “உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!” என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; “அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்” (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள். 2:60

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. //இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு தனியார் வாகனத்தின் மூலம் குடிநீரை விநியோகிக்க, ஒரு டிரிப் ரூபாய் 1500 செலவில் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம்//

    இந்த செலவு பேரூராட்சியின் செலவா ? இல்லை தனிநபர்,பொதுமக்கள்,சமுதாய அமைப்புகளின் நிதியா தெரிந்தவர்கள் விளக்கவும்//

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.