.

Pages

Saturday, May 24, 2014

AFFA வின் பரபரப்பான முதல் ஆட்டத்தில் பொதக்குடி அணி வெற்றி !

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 11 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டியின் எழாம் நாள் ஆட்டம் இரண்டு ஆட்டங்களாக இன்று [ 24-05-2014 ] மாலை 4.45 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இன்றைய ஆட்டத்தின் சிறப்பு விருந்தினராக தஞ்சை மாவட்ட கால்பந்து கழகத்தின் செயலாளரும், அதிரை AFFA அணியினரின் ஆலோசகருமாகிய திரு.கோபாலகிருஷ்ணன் வருகை தந்து சிறப்பித்தார்.

இன்றைய முதல் ஆட்டத்தில் பொதக்குடி அணியினரும், ஆலத்தூர் அணியும் மோதின. விறுவிருப்பாக ஆட்ட இறுதியில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தனர். இதைதொடர்ந்து ட்ரைபிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதிலும் இரு அணிகளும் சமநிலையில் இருந்தனர். இதைதொடர்ந்து டாஸ் முறையில் பொதக்குடி அணி வெற்றி பெற்றதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

வழக்கம் போல் ஆட்ட நிகழ்சிகள் அனைத்தையும் அஹமது ஹாஜா இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். இன்று நடைபெற்ற ஆட்டங்களின் பிராதான அம்பயராக அஸ்ரப்பும், அவருக்கு உதவியாக லோட்டஸ் நெய்னா மற்றும் ராஜிக் அஹமது ஆகியோர் சிறப்பாக கையாண்டனர். இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.

இதையடுத்து இரண்டாவது ஆட்டமாக அதிரை AFFA அணியினரும், மேலநத்தம் அணியினரும் மோத இருக்கின்றனர்.

கம்பீரமாக காட்சியளிக்கும் ஆட்டத்தின் அம்பயர்கள்


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.