இன்றைய இறுதி ஆட்டத்தில் தஞ்சை அணியினரும் , நாகூர் கெளதியா அணியினரும் மோதினார்கள். விருவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1 கோல் அடித்து தஞ்சைஅணியினர் வெற்றிபெற்றனர்.
இன்றைய ஆட்ட நிகழ்சிகள் அனைத்தையும் SIS முஹம்மது இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். இன்று நடைபெற்ற ஆட்டங்களின் பிராதான அம்பயராக வாசுதேவனும், இவருக்கு உதவியாக இம்ரான், ருத்வான் ஆகியோர் சிறப்பாக கையாண்டனர்.
இறுதி ஆட்டத்தை தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், அதிரை காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன், தஞ்சை மாவட்ட கால்பந்து கழகத்தின் செயலாளரும், அதிரை AFFA அணியினரின் ஆலோசகருமாகிய திரு.கோபாலகிருஷ்ணன், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் விளையாட்டு ஆசிரியர் திரு. ராமச்சந்திரன், கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் அன்வர் அலி, லியாகத் அலி, AFFA தலைவர் செய்யது முஹம்மது புஹாரி, துணைதலைவர் முஹம்மது தமீம், செயலாளர் சமியுல்லாஹ், பொருளாளர் அபுல் ஹசன் சாதுலி, துணைச்செயலாளர் அஹமது அனஸ், ஒருங்கிணைப்பாளர்கள் சேக் தம்பி, இத்ரீஸ், அஸ்ரப், பாருக், தாரிக் ஆகியோர் இன்றைய இறுதி போட்டியில் வெற்றி பெற்ற முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்ற தஞ்சை மற்றும் நாகூர் அணியினருக்கு பதக்கங்களையும், கோப்பையையும் வழங்கி கெளரவித்தார்கள். தொடரில் சாதனை நிகழ்த்திய சிறந்த 10 வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் அதிரை AFFA, நாகூர், தஞ்சை ஆகிய அணிகள் சிறப்பு பரிசுகளை அள்ளிகுவித்தன.
முன்னதாக வரவேற்புரையை SIS முஹம்மது வழங்க, நன்றியுரையை AFFA துணைதலைவர் முஹம்மது தமீம் வழங்கினார். இறுதி ஆட்டத்தைகாண விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் பெரும் திரளாக வருகை தந்து ரசித்தனர்.
வெற்றி பெற்ற அணியினருக்கும்,இறுதிப்போட்டி வரை சென்று தோல்வி அடைந்த அணியினரும் எனது வாழ்த்துக்களையும்,பாராட்டுகளையும் தெரிவிக்கின்றேன்.
ReplyDelete