நமதூரில் எவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகின்றது ?
1. திருமண வலீமா விருந்து
2. புதிய வீடு கட்டி குடிபோகும்போது வைக்கப்படும் விருந்து
3. விருந்தாளிகளுக்கு வைக்கப்படும் விருந்து
4. நண்பர்களுக்கு வைக்கப்படும் விருந்து
5. ஹஜ் செல்லும்போதும் / முடித்துவிட்டு வரும்போதும்
6. பெருநாள் விருந்து
7. குழந்தை பிறப்பு
என இவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகிறது.
லுஹர்த் தொழுகை முடித்தவுடன் வைபவங்கள் நடக்கும் வீட்டினிலோ அல்லது திருமண மண்டபத்திலோ ஏற்பாடு செய்யப்படும் விருந்துகளை, உற்றார் - உறவினர்- நண்பர்கள் ஆகியோருக்காக உபசரிக்கப்படும்.
ஊரிலே 'கலரி சாப்பாடு' என்றொரு பெயரிலும் இவற்றை அழைப்பதுண்டு.
இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏழை !?, பணக்காரான் !?, தெருக்காரன் - எங்கள் குடும்பம் !?, எங்களுக்கு வேண்டியவர் என்ற பாகுபாடுகள் இல்லாமல் தமிழகத்திலேயே சஹனில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய ஊர்களில் நமதூரும் ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு சஹனிலும் தலா மூவர் வீதம் அமர்ந்து பரிமாறுவார்கள்.
அஞ்சு கறி என்ற பெயரில் விருப்பமாக அழைக்கப்படும் இந்த உணவை அதிரையர் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர்ரக அரிசியில் தயாரிக்கப்படுகிற கம கம மணத்துடன் நெய்ச்சோறு, செம்மறி ஆட்டுக்கறியில் கூடுதல் ஆயில் ( ! ) இட்டு தயாரிக்கப்படுகிற இறைச்சி ஆணம், நாவிற்கு சுவையைக்கூட்ட நாட்டுக் கத்தரிக்காயில் பச்சடி, உருளையில் குருமா, செரிமானத்திற்கு என்று சொல்லியே ( ! ? ) அனைவரும் விரும்பி பருகக்கூடிய புளியானம் ( ரசம் ) போன்றவை ஒரு வகையாகவும்...
மற்றொறு வகையாக பிரியாணி ! நமதூருக்கே பெருமை சேர்க்கக்கூடிய உணவாகவும் அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக்கூடியதாகவும் உள்ளது. இவை சீராகச்சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர்ரக அரிசியில் சமமான அளவு செம்மறி ஆட்டுக்கறிச் சேர்த்து தயாரிக்கப்படுகிறப் பிரியாணி சுவையாகவும், நறுமண மிக்கதாகும் இருக்கும். பிற ஊர்களுக்கு சவால் விடக்கூடிய அளவிற்கு டேஸ்டாக இருக்கும். கூடுதல் இணைப்பாக துண்டுகளிட்ட பொரிச்சகோழி, வெங்காயத்தயிர் ஊறுகாய், எலுமிச்சை கலரி ஊறுகாய் போன்றவை இடம்பெற்றிருப்பது வயிறார உண்பதற்கு கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
தால்ச்சா ! இதன் ருசியே தனி, அஞ்சு கறி, பிரியாணி போன்ற உணவிற்கு கூடுதல் இணைப்பாக அதில் இடம்பெற்றிருக்கும்.
இனிப்பு வகைகளாக...
1. சேமியாவில் தயாரிக்கப்படுகிற பிர்னி
2. பீட்ரூட்டில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
3. மம்மி கோதுமையில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
4. ரவாவில் தயாரிக்கப்படுகிற கேசரி
5. பேரிட்சை - தக்காளி பழத்தில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
ஆகியவற்றில் ஏதாவது ஒன்று அஞ்சு கறி மற்றும் பிரியாணி உணவில் இடம்பெற்றிருக்கும். மேலும் ஒவ்வொரு சஹனிலும் மூன்று தண்ணிர்ப் பாக்கெட்கள் அதில் வைக்கப்பட்டிருக்கும். கைதொடைக்க பேப்பர்களும் இடம்பெற்றிருக்கும். :)
மறு சோறு போதும்... போதும்... எனச்சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் வழங்கி தங்களின் சகோதரத்துவ அன்பைக் காட்டுவார்கள்.
வாங்க காக்கா !
பேப்பரு தாங்க...
மூணு பேரா உட்காருங்க...
அங்கே ஒரு சஹன் வைய்ங்க !
எங்கே தால்ச்சா ?
இங்கே சோறு பத்தலே...
எங்கே மறுசோறு ?
இன்னொரு சுவீட் எடுத்துத் தாங்க !
என இதுபோன்ற பழக்கப்பட்ட சந்தோஷக் குரல்கள் கலரிச் சாப்பாட்டில் ஆங்காங்கே ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்...
என்ன சகோதரர்களே !
உங்களுக்கும் அப்படி ஒலித்ததா என்ன !?
கவனத்தில் கொள்ளவேண்டியவை :
வைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் வேதனைப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல சிந்திக்கபட வேண்டிய ஓன்று. உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண் விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாக கருதப்படும். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் போட்டு விதைப்போம். நாளை அது செழித்து வளர்ந்து சமூக அக்கரை உள்ள குடிமக்களை உருவாக்கும். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம்.
சேக்கனா M. நிஜாம்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
சரியான விருந்து, எங்க வயசு காரவங்களுக்கு ஒகே ஆயிடும், இப்போ உள்ள இளைஞர்கள் திணறுகின்றனர். பாவம்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
பெரிய இடத்திற்கு விருந்து உன்ன வருபவர்களை முறையாக கவனிப்பதில்லை என்று ஒரு குறை நீண்டகாலமாக இருக்கிறது நமதூரில்....உண்மைதானே
ReplyDeleteபெரிய இடங்களில் மட்டும் அல்ல உன்மையாளர்கள்(நானயகாரர்) என்றும் உயர்ந்த குளம் என்றும் தங்களை தாங்களே பெருமை பீட்றி கொள்பவர்களிடம் இது அதிகம்
ReplyDeleteபெரிய இடங்களில் மட்டும் அல்ல உன்மையாளர்கள்(நானயகாரர்) என்றும் உயர்ந்த குளம் என்றும் தங்களை தாங்களே பெருமை பீட்றி கொள்பவர்களிடம் இது அதிகம்
ReplyDeleteகல்யாணம், வலிமா என்றெல்லாம் கூப்பாடு அழைப்பு வருது, நாமும் மதித்து போனால், தெரு பாகுபாடு, குடும்ப பாகுபாடு, எல்லாம் பார்க்கப்படுகிறது.
ReplyDeleteமற்ற நாட்களில் தொழும்போது யாரும் யாரையும் பார்ப்பதில்லை. வலிமாவுக்கு தொழும்போது பாகுபாடு பார்க்கப்படுகிறது, அப்பத்தானே சலாம் கொடுத்தவுடம் அப்படியே செட்டாக போய் சஹன்னில் உட்கார முடியும்.
அஞ்சுகரி சோறு மாதிரி அஞ்சு விதமாக பிரிக்கப்பட்டு பாகுபாடு பார்க்கப்படுகிறது.
This comment has been removed by the author.
ReplyDelete/ இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏழை !?, பணக்காரான் !?, தெருக்காரன் - எங்கள் குடும்பம் !?, வேண்டியவரை அழைப்பது என்ற பாகுபாடுகள் இல்லாமல் தமிழகத்திலேயே சஹனில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய ஊர்களில் நமதூரும் ஒன்றாக இருக்கிறது. //
ReplyDeleteஇந்தமாதிரி ஊம குசும்புதானே வேணாங்கிறது. உல்டாவா சொல்றிங்க. அந்தபக்கமா போய் பாருங்க தெரியும்.
எத்தனை தவ்ஹீத் அமைப்பு வந்தாலும் இவனுகளே திருத்தவே முடியாது.
அழைப்பிதழில் வரவேற்பு அழகுவடியும். நேரே போனால் நம் முகத்தில் என்னை வடியும். இப்படியும் சில பகுதிகள். இதை விட்டிட்டீர்களே !
ReplyDeleteஎத்தனை விதமாக பிரித்து பார்த்தாலும் அவங்க உண்ணுகிரத்தை தான் நாமும் உண்ணுகிறோம், அதில் மட்டும் ஒவ்வொரு தெருவுக்கு சமைப்பது கிடையாது.
ReplyDeleteநம்மவூர் பாரம்பரிய 5 வகை உணவு, பிரியாணி தமிழகத்தில் பிரபலமானவை தான் அதோடு உணவு சாப்பிடும் முறையும் தனித்துவம் பெற்றவை. இவ்வகை உணவருந்திய வெளிவூர் மக்கள், கல்லூரி மாணவர்கள் பேசுவதை நாம் கேட்கமுடிகிறது.
ReplyDeleteகாலங்கள் மாறினாலும் சுவை அதே தான் ஆனால் உணவு பாத்திரங்கள் மாறிவிட்டன, தண்ணீர் பாக்கெட்கள் சுற்றுசூழலுக்கு கேடுவிளைவிக்கும் அதற்க்கு மாற்றுவழி காணக்கூடாதா?
மக்களிடையே பாகுபாடு இருப்பது உண்மை தான் தங்கள் வயதுக்கும், வசதிக்கும் பார்த்துதான் சஹனில் அமர்வதை காண முடிகிறது, லஞ்சம், வரதட்சணை எப்படி ஒழிக்க முடியாதோ அதேபோல் இதுவும் தான்.
தப்லிக் ஜமாத்தில் போகும் போது இந்த வேற்பாட்டை பார்க்க முடியாது- நன்லொலுக்கம் கற்ற்க்க சிறந்த வழி இதுவே!
படிக்கும் போதே சாப்பிட போல் தோணுது, அருமையாக கட்டுரை வடிவமைத்த ஜனாப் சேக்கனா M. நிஜாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தொடரட்டும் ஆக்கம்!
I don't know about the partiality among us but I pretty much sure and I strongly agree your words about thableeq jammath. It's wonderful.
Deleteநிறபேதம், இனபேதம், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம், ஏழைப் பணக்காரன் என்ற பேதம், தெருபேதம் போன்ற பேதங்கள் ஒழித்த மார்க்கம்.
ReplyDeleteகாக்கா நீங்கள் எழுதிய கட்டுரை அருமை,இங்கு பல பேர் பல கருத்துகளை குறிப்பிட்டுள்ளனர் நூற்றுக்கு நூறு வாஸ்தவமான கருத்துதான்.
ReplyDeleteBro Nijam, you have done a nice job.in each and every writing,you are delivering a nice thought amongs the readers.
ReplyDeleteIn this article I found that many of our readers say that there is a partiality in between us.So I urge you to find out what is going on and ink it here so that people can read and realize it.
And if that's true, let the people know the solution through Quran and Sunna .