.

Pages

Sunday, May 11, 2014

பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு ஜாஹிர் ஹுசைன் இல்லத்தில் நடைபெற்ற திருமணம் !

சின்ன நெசவுத்தெருவைச் சேர்ந்த முஹம்மது யாக்கூப் அவர்களின் மகன் முஹம்மது யூசுப் மணமகனுக்கு பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் அமைந்துள்ள ஜாஹிர் ஹுசைன் அவர்களின் இல்லத்தில் இன்று [ 11-05-2014 ] காலை திருமணம் நடைபெற்றது. இதில் மணமகன் 1-1/2 பவுன் தங்க நகையை மஹராக மணமகளின் பொறுப்பாளரிடம் கொடுத்து மணமுடித்தார்.

இதில் தவ்ஹீத் ஜமாத்தின் மார்க்க பிராசாரகர் அப்துல் கபூர் மிஸ்பஹி அவர்களின் சிறப்பு சொற்பொலிவுடன் இருவீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் முன்னிலையில் இனிதே நிறைவேறியது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




21 comments:

  1. தவ்கீத் திருமணத்தில் ஆடம்பர பந்தல் ஏன், நிழலை தேடித்தானே? உங்களுடைய தேவைக்கு எப்படி வேண்டுமானாலும் மார்க்க பிரசாரம் செய்வீர்கள்?

    ReplyDelete
  2. சரியா சொன்னிர்கள்

    ReplyDelete
  3. //தவ்கீத் திருமணத்தில் ஆடம்பர பந்தல் ஏன், நிழலை தேடித்தானே? உங்களுடைய தேவைக்கு எப்படி வேண்டுமானாலும் மார்க்க பிரசாரம் செய்வீர்கள்?//

    ஆமாம், அவர்களுக்கு வசதிதான் முக்கியம். வசதிக்கு ஏற்றப எப்படியும் வாழ்வார்கள். மாற்றத்திற்கு ஆதாரம் நிறைய கைவசம் வைத்திருப்பார்கள். இப்ப நடிக்கவும் தயங்கமாட்டார்கள்.

    ReplyDelete
  4. தவ்ஹீதெல்லாம் சும்மா டப்பா. அவங்க தேவைக்கு எல்லாம் செய்து கொள்வார்கள், மவுத்தை அவங்க இஷ்டத்துக்கு மாற்ற முடியுமா?

    ReplyDelete
  5. ஏன் முடியாது நேற்று சொன்னதை இன்று இல்லை என்று கூறமுடியும். கைவிரலை ஆட்டி ஆட்டி ஆட்டி அடுத்தவர் தொழுகையை குழப்ப முடியும். ஆலிம்களை வாய்க்கு வந்தபடி திட்டமுடியும். இப்படி நிறைய முடியும் என்ற முடியும். நன்னாவே குழப்பமுடியும்.

    ReplyDelete
    Replies
    1. ..அடுத்தவர் தொழுகையை கைவிரலை ஆட்டி ஆட்டி குழப்ப முடியும் //

      விரல் ஆட்டலாமா கூடாதா என்று கொஞ்சம் சொல்லுங்க சகோ

      Delete
    2. அவரவர் மனதை பொறுத்தது. ஒவ்வொரு விரலசைவிலும் நி-யா-ய மனம் தப்பு தப்பு தப்பு என்று உணர்ந்திடும். சா-த-க மனம் வெறுமனே ஆதாரம் தேடும் அதற்காக சப்பைக்கட்டும். ஆழ்ந்த அமைதியில்தான் தொழுகை நிகழ்வுகள் நிகழும். தனக்கும் பிறருக்கும் அமைதியை கெடுக்கும் எதுவும் கூடாது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒத்த அசைவில் கவனம் சிதறாது. வேறுபட்ட அசைவு கவனம் கொள்ளும். இது பொதுவான மனித இயல்பு.

      Delete
  6. கேள்வி கேட்கும் அனைவருக்கும்:

    நிழழுக்காக போடப்பட்ட இந்த பந்தல் எப்படி ஆடம்பர பந்தலாக மாறியது? இவ்வாறு நிழழுக்காக பந்தல் போடுவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டத்திற்க்கான ஆதாரம் தர முடியுமா?

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அழைக்கும்....

    அன்வர்..

    நிழலுக்காக பந்தல் போட்டார்கள்... stage நிழலுக்காகவா?

    பதில்.......???

    ReplyDelete
    Replies
    1. நிழழுக்காக போட்ட பந்தலுக்கு வெள்ளை துணி Decoration தேவையா?

      Delete
    2. அந்த வெள்ளை துணி போடுவது எவ்வகையில் Decoration ஆகும் என்பதை தெளிவு படுத்தவும். பந்தலில் போடப்பட்டுள்ள கீற்றுகளில் உள்ள இடைவெளி வழியாக வெயில் வராமல் இருக்க தான் அந்த வெள்ளை துணி கட்டப்படுகிறது. வெள்ளை துணி கட்டுவதை Decoration என்று சொன்ன விஞ்ஞானி நீங்களாக தான் இருக்க முடியும்.

      Delete
  8. இங்கு எவருக்கும் எவரைப்பற்றியும் பேச அருகதை கிடையாது, இங்கு எல்லோரும் நல்லவரே அண்டு கெட்டவரே. இப்படி இருக்க யாரும் நல்லவன் கிடையாது, கெட்டவன் கிடையாது.

    விருப்பம் இருந்தால் வாழ்த்திட்டு போங்க, இல்லா விட்டால் சும்மா போங்க. என்னமோ இவங்க மட்டும்தான் பெரிய இதுமாதிரி பேசுறது.

    இந்த் ஊரில் திருத்தவேண்டியது எவ்வளவோ இருக்குது, முதலில் உங்கள் வீடுகள் திருத்துங்கள், அதுக்கு முதல் உங்களை திருத்த முயலுங்கள்.

    ReplyDelete
  9. நளீம்

    அஸ்ஸலாமு அலைக்கும்.

    //நிழலுக்காக பந்தல் போட்டார்கள்.//

    உரை நிகழ்த்துவது மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்ற அடிப்படையில் போடுவது மார்க்கத்தில் தடையில்லை. உங்களின் மார்க்க அறிவை (?) வைத்து இதை தவறு என்று நிரூபியுங்கள்.

    ஆடம்பர திருமணத்தில் எல்லாம் கேள்வி கேட்க மாட்டீர்கள். எப்படி குற்றம் காண வேண்டும் என்று தேடி கண்டுபிடிக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. (ஆடம்பர திருமணம் செய்பவர்கள் யாரும் இதுபோல் சுய விளம்பரம் செய்யவில்லை)

      Delete
    2. இதை யாரும் விளம்பரத்திற்க்காக பதியவில்லை. எளிமையான முறையில் நபிவழி திருமணத்தை எல்லாரும் நடத்த முன்வர வேண்டும் என்ற அடிப்படையில் தான் வெளியிடப்பட்டுள்ளது.

      Delete
  10. உரை நிகழ்த்துவது மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்ற அடிப்படையில் stage போடுவது மார்க்கத்தில் தடையில்லை.

    ReplyDelete
  11. 'பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீகைர்'

    உங்களுக்கு அல்லாஹ் பரகத் செய்வானாக ! நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக !


    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. வெள்ளை துணி Decoration மக்கள்கூட்டம் மணமகன் தங்க நகை மஹர் மார்க்க சிறப்பு சொற்பொலிவு இருவீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் முன்னிலையில் நமது ஊரில் நடைபெரும் அணைத்து திருமணம் போன்றுதான் இந்த திருமணமும் நடைபெற்று உள்ளது
    (இன்னும் சொல்லபோனால் ஆடம்பர திருமணம் செய்பவர்கள் கூட போட்டிடாத மேடை Decoration வேரூ இந்த திருமணத்தில் ) இதில் எங்கு எளிமையான முறையில் நபிவழி திருமணம் நடைபெற்று உள்ளது என்பதை கொஜ்ஜம் விளகுகள் இல்லை என்றால் இது சுய விளம்பரம் என்பதை ஒற்று கொள்ளுகள்

    ReplyDelete
    Replies
    1. //வெள்ளை துணி Decoration//

      வெள்ளை துணி போடுவது Decoration என்று கண்டுபிடித்த நீங்கள் அறிவாளி தான். வெள்ளை துணி வெயிலை மறைக்க என்பது உங்களுக்கு தெரிந்தும் தெரியாதாது போல நடிக்கீறீர்கள். மற்ற திருமணங்களில் பந்தள்களில் செய்யப்படும் அலங்கார Decoration னை மறைந்து ஊரையே ஏமாற்ற பார்க்கிறீர்கள்.

      // மக்கள்கூட்டம்//

      ஒரு திருமணத்தில் எத்தனை நபர்களை அழைக்க வேண்டும் என்ற எந்த கட்டளையும் மார்க்கத்தில் இல்லை. மற்ற திருமணங்களை விட இந்த திருமணத்தில் மக்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது. என்ன செய்ய எதாவது குறை கண்டு பிடித்து ஆக வேண்டுமே?

      // மணமகன் தங்க நகை மஹர்//

      லட்சம் லட்சமாக வாங்கிக்கொண்டு, ஆயிரம் ரூபாய் மஹருக்கு என்று சொல்லும் ஊரில் அனைவருமே தங்க நகை மஹருக்கு கொடுக்கிறார்கள் என்று ஏன் புழுகுகிறீர்கள்? பிச்சைக்காரனிடம் 10 ரூபாய் எடுத்துவிட்டு, ஒரு ரூபாய் போடுவது போல் உள்ள ஒரு நாடகத்தை மஹர் என்று புளுகுகிறீர்கள்.

      //மார்க்க சிறப்பு சொற்பொலிவு இருவீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் முன்னிலையில் நமது ஊரில் நடைபெரும் அணைத்து திருமணம் போன்றுதான் இந்த திருமணமும் நடைபெற்று உள்ளது //

      எல்லா திருமணங்களிலும் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவது இல்லை. அப்படியே நடைபெற்றாலும், அல்லி குத்து பைனகுமாக என்ற கட்டுக்கதை துஆவை பயான் என்று சொல்லுகிறீர்கள் போல.

      //(இன்னும் சொல்லபோனால் ஆடம்பர திருமணம் செய்பவர்கள் கூட போட்டிடாத மேடை Decoration வேரூ இந்த திருமணத்தில் )//

      நிகழ்த்தப்படும் உரையை எல்லாரும் யாரும் பேசுகிறார் என்று கவனித்து கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் மேடை அமைப்பது ஆடம்பரம் அல்ல. இருந்தாலும், இதையும் கூட தவிர்த்து இருக்கலாம்.

      //இதில் எங்கு எளிமையான முறையில் நபிவழி திருமணம் நடைபெற்று உள்ளது என்பதை கொஜ்ஜம் விளகுகள் இல்லை என்றால் இது சுய விளம்பரம் என்பதை ஒற்று கொள்ளுகள்//

      நபிவழி அடிப்படையில் தான் இந்த திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் ஆடம்பரங்கள் இல்லை, மார்க்கம் காட்டித்தராத பித்அத்கள் இல்லை. குறை சொல்ல வேண்டும் என்பதற்க்காக நேரில் பார்த்தது போல் இது நபிவழி திருமணம் இல்லை என்கிறீர்கள். நீங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டீர்களா?

      எல்லாமே ஒரே மாதிரி திருமணங்கள் என்று காட்டிவிட்டால் சுவையான திருமண பிரியாணிக்கு தடை வராது அல்லவா?

      Delete
  14. வெள்ளை துணி Decoration//

    வெள்ளை துணி போடுவது வெயிலை மறைக்க என்று நீங்கள் கூறுகீறீர்கள் அப்படி என்றால் வெள்ளைதுணியை சுற்றி உள்ள கலர்பார்டர் Decoration அதுவும் வெயிலை மறைக்க என்று நீங்கள் கூறு வீர்கள் போல ? வெள்ளை துணி போடுவது வெள்ளைதுணியை சுற்றி கலர்பார்டர் Decoration போடுவது இதையும்தான் எங்கள் ஊரில் பந்தள்களில் செய்யப்படும் அலங்கார Decoration என்பார்கள் இது Decoration இல்லை என்று கண்டுபிடித்த நீங்கள் அறிவாளி தான். வெள்ளை துணி போடுவது வெள்ளைதுணியை சுற்றி கலர்பார்டர் இதும் Decoration தான் என்பது உங்களுக்கு தெரிந்தும் தெரியாதாது போல நடிக்கீறீர்கள். மற்ற திருமணங்களில் பந்தள்களில் செய்யப்படும் அலங்கார Decorationனை கூறி இந்த Decorationனை மறைந்து ஊரையே ஏமாற்ற பார்க்கிறீர்கள்...!!

    மக்கள்கூட்டம்//

    ஒரு திருமணத்தில் எத்தனை நபர்களை அழைக்க வேண்டும் என்ற எந்த கட்டளையும் மார்க்கத்தில் இல்லை. சரி தான் ஆனால் மற்ற திருமணங்களை விட இந்த திருமணத்தில் மக்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது. என்று நீங்கள் கூறுகீறீர்கள் இருவருக்குமேல் இருதால் கூட அது கூட்டம் என்றுதான் கூறுவார்கள் இதில் குறைவு நிறைவு என்று எல்லாம் ஒன்றும்இல்லை // என்ன செய்ய எதாவது குறை கண்டு பிடித்து ஆக வேண்டுமே?// குறை கண்டுபிடிக்கீரோம் என்ரால் உங்களிடம் குறை உண்டு என்றுதான அருத்தம் ( குறை கண்டுபிடிப்பது என் நோக்கம் இல்லை குறைஎதும் எங்களிடம் இல்லை என்று கூறும்பொழுது குறை கண்டுபிடித்துதான் ஆகவேண்டும் ........ மணமகன் தங்க நகை மஹர்//

    லட்சம் லட்சமாக வாங்கிக்கொண்டு, ஆயிரம் ரூபாய் மஹருக்கு என்று சொல்லுபவர்களை நான் கண்டிகின்ரேன் ஆனால் உங்கள் இயக்கதை தவிர ஊரில் உள்ள அனைவருமே தங்க நகை மஹருக்கு கொடுக்கவில்லை என்று ஏன் புழுகுகிறீர்கள்? பிச்சைக்காரனிடம் 10 ரூபாய் எடுத்துவிட்டு, ஒரு ரூபாய் போடுவது போல் உங்கள் இயக்கத்தில் உள்ள யாரும் செய்யவில்லையா?? முன்புசெய்தோம் அறியாமல் என்றால் இப்பொழுது வாங்கியவர்கள் திருப்பி கொடுக்கலாம் அல்லவா இதுபோல் மேடை அமைத்து...??
    எல்லா திருமணங்களிலும் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவது இல்லையன்று எதைவைத்து சொல்லுகிறீர்கள் என்று புரியவில்லை எனக்கு கருதுதெறிந்து அதுபோல் எந்த திருமணங்களிலும் மார்க்க சொற்பொழிவு நடைபெறாமல் நடைபெற்றதும் இல்லை ,// அல்லி குத்து பைனகுமாக என்ற கட்டுக்கதை துஆவை பயான் என்று சொல்லுகிறீர்கள் போல// .துஆவிர்கும் பயான்னுக்கும் வித்தியாசம் கூடதெறியாமல் இல்லை எதோ அல்லாவின் உதவியால் எனக்கும் கொஜ்ஜம் மார்க்கம்தெறிவும் சகோதரரே..

    //நேரில் பார்த்தது போல் இது நபிவழி திருமணம் இல்லை என்கிறீர்கள். நீங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டீர்களா? //

    நான் நேரில் பார்க்கவில்லை இந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை இந்த போட்டோகலை வைத்து பார்த்தால் எளிமையான முறையில் நடைபற்ற திருமணம் போன்று தெறியவில்லை

    //எல்லாமே ஒரே மாதிரி திருமணங்கள் என்று காட்டிவிட்டால் சுவையான திருமண பிரியாணிக்கு தடை வராது அல்லவா?//

    எதற்கு இதை இங்கு பதிதீர்கல்என்று எனக்கு புரியவில்லை இது வரை நீங்கள் எந்த திருமணதிலும் பிரியாணி சாபிட்டது இல்லையா..???
    உண்ணலாம் பருகலாம் ஆனால் வீண் விரயம் மட்டும் பண்ணாமல் இருந்தால் போதும் ( வெயிலில் எதற்கு டியுப் லைட் எரிகிறது அடுத்த திருமணதில்லாவது வீண்விரயம் செய்வதை தவிர்த்தால் நன்று .....!!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.