.

Pages

Monday, May 26, 2014

வடநாட்டு வாலிபர்கள், மதுரையில் பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கிமுனையில் கொள்ளை.


 
துரை தெற்கு ஆவணிமூலவீதியில் நகைக்கடை வைத்திருப்பவர் ரெங்கராஜன். இவர் பிரபல நகைக்கடை அதிபரின் பேரன். இவரது கடையில் சிம்மக்கல் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 20) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

வழக்கம் போல நேற்று காலை 9.15 மணியளவில் நகைக்கடையை சக்திவேல் திறந்தார். அப்போது ஜீன்ஸ் பேண்ட் அணிந்த வடநாட்டு வாலிபர்கள் 3 பேர் அந்த கடைக்கு வந்தனர். அவர்கள் சக்திவேலிடம் நெக்லஸ் மாடல் நகை வேண்டும் என்று தமிழ் கலந்த ஹிந்தி மொழியில் கேட்டுள்ளனர். அதற்கு அவர், “எங்கள் கடை உரிமையாளர் கோவிலுக்கு சென்றுள்ளார் 11 மணிக்குமேல் வந்தால் மாடல் காண்பிக்குறோம் எனக்கூறிவிட்டு கடையை சுத்தம் செய்யத்தொடங்கினார்.

உடனே அவர்கள் கடையின் வெளியே சென்று சுற்றிலும் நோட்டம் பார்த்து விட்டு மீண்டும் கடைக்குள் வந்தனர். பின்னர் அவர்களில் ஒருவன் கடைக்குள் ஓடிவந்து, திடீரென ஒரு துப்பாக்கியை எடுத்துக்காட்டி மிரட்டினான், தொடர்ந்து மற்றவர்களும் கடைக்குள் வந்து சக்திவேலின் கைகளையும் கால்களையும் கட்டினர்.

பின்னர் கடையின் முன்வாசல் இரும்புக்கதவை (ஷட்டர்) கீழே இறக்கி விட்டு, நகை வைத்திருக்கும் லாக்கர் சாவியை சக்திவேலிடம் கேட்டனர். அவர், முதாளியிடம் தான் உள்ளது என்றார். உடனே அவரின் கைகளை கட்டி உள்அறையினுள் அடைத்தனர்.

பின்னர் அந்த வாலிபர்கள் தாங்கள் கொண்டு வந்த ஆயுதங்களால் கல்லாப்பெட்டியை உடைத்தனர். அதில் வைக்கப்பட்டிருந்த வளையல், நெக்லஸ், செயின் உள்பட மொத்தம் 23 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி, ரூ.5,250 ஆகியவற்றை எடுத்தனர்.

அப்போது கடையில் வேலை பார்க்கும் மற்றொரு ஊழியர் ஜோதிமணி(56) அங்கு வந்தார். அவர் கடையின் ஷட்டர் பாதி திறந்தும், திறக்காமல் இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்தார். பின்னர் ஷட்டரை திறந்து உள்ளே சென்றவர் அதிர்ச்சி அடைந்தார்.

ஜோதிமணியை கண்டதும் அந்த வாலிபர்கள் மீண்டும் துப்பாக்கியை எடுத்து அவரை மிரட்டினார்கள். ஜோதிமணி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு, கடை முன்பு பழ வியாபாரம் செய்து வரும் பஞ்சு(40) என்பவர் ஓடி வந்தார். அவரும், ஜோதிமணியும் சேர்ந்து 3 வாலிபர்களையும் பிடிக்க முயன்றனர்.

இவர்கள் இருவரும் நகைக்கடையில் கொள்ளையடித்து விட்டு தப்பித்து ஓடுகிறார்கள் என்று கூச்சலிட்டு ஓட, இதைப்பார்த்த போக்குவரத்து போலீஸ்காரர் அர்ஜுனன்  முயன்றும் அவர்கள் பிடிகொடுக்காமல் தப்பித்து விட்டதால், வயர்லஸ் மூலம் அனைத்து காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதுதியாக காவல் துறையினரின் அதீதமுயற்ச்சியினால் அக்கொள்ளையர்கள் பிடிப்பட்டனர். விசாரணையில் அம்மூவரும் 25 வயதை தாண்டாதவர்கள் என்றும், கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.  
நன்றி.
முத்துப்பேட்டை நியூஸ்.

குறிப்பு:-
21-மார்ச்-2014 அன்று “இவன் அவனே தான், இந்த ஆளை உங்களுக்கு தெரியுமா? ஆகிய தலைப்புகளில் ஒரு விழிப்புணர்வு ஆக்கத்தை நமதூர் வலைதளங்களில் பதிந்ததை அநேகம் பேர் படித்தனர். ஒரு சிலர் பின்னூட்டமும் இட்டனர். விழிப்புணர்வு அடைந்தது எத்தனை பேர்?

இவன் அவனே தான்.


இந்த ஆளை உங்களுக்கு தெரியுமா?

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
 Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com

  

4 comments:

  1. வீரத்துடன் செயல்பட்ட அனைவரின் செயலும் பாராட்டுக்குரியது.

    ஜமால் காக்கா,நீங்கள் சொன்ன அறிவுரைகளிலிருந்து ஒரு சிலவற்றை எனது நண்பரிடம் செயல்பட சொல்லி இருகின்றேன். பல போட்டிகளுக்கு பல ரூபாயகளை பரிசாக கொடுக்கும் நமதூர்வாசிகள் இதுபோன்ற நல்ல ஆக்கங்களை பிரதி எடுத்து அனைத்து அல்லது உங்களது முஹல்லா,தெருக்கு வினியோகிக்கலாம்.

    போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்,உங்கள் பணி தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. தம்பி உங்கள் கருக்குது நன்றி. உங்களுடைய ஒத்துழைப்பு இருந்தால் அதுவே போதும். ஒத்துழைப்பு ஒருமனதோடு இருத்தால் அதை யாரும் அசைக்க முடியாது.

      மேலே உள்ள மின் அஞ்சலுக்கு உன்னுடைய தொலைபேசி எண்களை தரவேண்டுமாய் கேட்கின்றேன்.

      Delete
  2. நேற்று ஞாயிற்று கிழமை எனக்குதான் லீவு இல்லை, உங்களுக்குமாம் இல்லை, வடநாட்டு கொள்ளையர்கள் தமிழ் நாட்டில் குழு இருக்கின்றது. உள் நாட்டுக்காரன் சொல்லாமால் வெளிநாட்டுக் காரங்களுக்கு என்ன தெரியும். புடிச்சி ஒரு புடி புடித்தால் எலாம் உண்மையும் வெளி வரும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.
      ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாள்.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.