.

Pages

Saturday, May 10, 2014

+2 தேர்வில் அரபி பாடத்தில் முத்துப்பேட்டை மாணவி அனீஸ் பாத்திமா மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்று சாதனை !

எனது தேர்ச்சிக்கு பள்ளி முதல்வரும் ஆசிரியரும் தான் காரணம். பிளஸ்-2 தேர்வில் அரபி பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற மாணவி அனீஸ் பாத்திமா பேட்டி.

முத்தப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி அனீஸ் பாத்திமா பிளஸ்-2 தேர்வில் அரபி பாடத்தில் 194 மார்க் எடுத்து மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். அவர் ஆங்கிலம் 178, இயற்பியல் 150, உயிரியல் 159, வேதியல் 169, கணக்கு 145 மொத்தம் 995 மார்க் பெற்றுள்ளார். அனீஸ் பாத்திமா அரியலூர் பகுதியை சேர்ந்த உதுமான் அலி – பவுசியா பேகம் தம்பதியின் மகள் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றதை குறித்து நிருபரிடம் கூறுகையில்: 'நான் தேர்ச்சி பெற்றதை கண்டு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது தேர்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் சகுந்தலா, ஆசிரியர் பசூல் ரஹ்மான் ஆகியோர் முழு காரணம். எனது பெற்றோர்கள் முழு ஊக்கத்தை தந்தார்கள். நான் கவுன்சிலிங் போய் மேற் படிப்பு குறித்து முடிவு செய்வேன் என்றார். தாய் பவுசியா பேகம் கூறுகையில்: எனது மகள் இந்த அளவுக்கு தேர்ச்சி பெருவாள் என்று கணவில் கூட நினைத்து கூட பார்க்கவில்லை. மகளின் மேற்படிப்புக்கு பெரும் முயற்சியும் ஒத்தழைப்பும் கொடுப்போம்' என்றார்.

நன்றி : 'நிருபர்' முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை

11 comments:

  1. சமுதாயத்தில் கல்வியில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சியின் வெளிப்பாடு . வாழ்த்துக்கள்.
    وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا ۚ وَكَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
    அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம். 12:22

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். மென்மேலும் பல உயர்வுகளைப் பெற அல்லாஹ் துணை இருப்பானாக.

    ReplyDelete
  5. அண்ணிய பெண்களின் புகைப்படங்களை தவிர்க்கவும்....அல்லாஹ் பாதுகாப்பானாக

    ReplyDelete
  6. போட்டோவை நம்ம தவிர்த்து என்ன பிரயோஜனம்? அவங்களே எல்லா பக்கமும் போடு போடு என்று போடுரார்களே, அது என்ன சொல்வீங்க மக்களே.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்......#fb

      Delete
  7. பார்கின்ற பார்வையை பொறுத்தது. ஒரு சமயம் இதன் மூலம் நல்ல மாப்பிள்ளை கிடைக்கும் என்று இருக்கும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.