.

Pages

Sunday, May 25, 2014

அதிரையில் மெய்சிலிர்க்க வைத்த பள்ளி தோழர்களின் சந்திப்பு !

அதிரையை சேர்ந்தவர்கள் மன்சூர், அஸ்லம், பாசின், நிஜாம். பள்ளித்தோழர்களான இவர்கள் பள்ளி, கல்லூரி படிப்புகளை ஒன்றாக முடித்துவிட்டு வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இவர்களிடேயே ஒருவருக்கொருவர் சந்தித்து பேசக்கூடிய வாய்ப்புகள் அமையாமல் இருந்து வந்தது.

இன்று காலை அதிரை புதுமனைத்தெரு பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஒன்றிணைந்த இவர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டதோடு மட்டுமல்லாமல் ஆளாளுக்கு வைத்திருந்த ஆன்ட்ராய்டு போன்களில் புகைப்படங்களை எடுத்துதள்ளியது பார்த்தோர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

நட்பு நட்புதானுங்க :)




27 comments:

  1. மஷா அல்லாஹ் இதை பார்த்து சந்தோஷம் அடைந்தேன். நிஜாம் எங்கப்பா தஃவ்பீக் அவனையும் சந்திச்சிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. நான் just miss.இருந்தாலும் எல்லோரையும் meet பண்ணியது ரொம்பவும் சந்தோஷம் .மாஷாஅல்லாஹ் .நீ தான் missing .

      Delete
    2. நன்றி ஆமி !

      எதிர்பாராத திடீர் சந்திப்பு !

      Delete
  2. எனக்கு ஞாயிற்று கிழமை என்றாலும் விடுமுறை கிடையாது.
    சூப்பர் பதிவு.

    ReplyDelete
  3. உங்களது நட்பின் சந்திப்பு என்னையும் பழைய ஞாபகத்திற்கு இழுத்துச் சென்று விட்டது.

    நாம் நம் வாழ்வில் வந்த மற்ற நண்பர்களை மறந்து போனாலும் பள்ளி,கல்லூரியில் பழகிய நட்புக்களை என்றைக்கும் மறந்து விடமுடியாது. இவ்வுலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் எப்போதாவது நீண்ட காலத்திற்குப் பிறகு சந்திக்கும் போது அனைத்துக் கவலைகளையும் மறந்து பழைய நினைவுகளில் மூழ்கி மகிழ்வது ரொம்ப மனதிற்கு இதமாக இனிமையாக இருக்கும்.

    உண்மையான நட்புக்கு ஈடு இணையான உறவு வேறு எதுவும் இருக்காது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ. அதிரை மெய்சா

      நட்பின் அருமை - பெருமை

      Delete
  4. நட்புக்கு பாலம் இல்லை;
    இல்லாத பாலத்தில் பிளவு இல்லை;
    இனிமையான உறவுகளுக்கு கசப்பு இல்லை;
    வயதான உறவுகளுக்கு வயோதிகமில்லை;
    நட்பு பற்றி இதற்குமேல் என்னால் எழுத முடியவில்லை. வாழ்த்துக்கள் நட்பூக்களே...

    ReplyDelete
    Replies
    1. நெய்னா, கவிதை தூள் !

      தொடர்ந்து எழுத முயற்சி செய்.

      Delete
  5. நாங்களும் எங்களுடைய. நண்பர்கள் போட்டோ அனுப்பி வைத்தால் அதிரை நியூஸில் போடுவிர்களா?

    ReplyDelete
    Replies
    1. இது போன்று நெகிழ வைக்கும் பள்ளி தோழர்களின் சந்திப்புகளை நிச்சயமாக பதிவில் கொண்டுவரப்படும்.

      புகைப்படங்களை editoradirainews@gmail.com
      என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி தாருங்கள்.

      Delete
  6. யான் போடமாட்டோம்? சொல்லுப்பா நிஜாமூ.....

    ReplyDelete
  7. நண்பர்கள்னா இப்படித்தான் இருக்கணும், வெரி குட்டு

    ReplyDelete
  8. ஃபோட்டோவுக்கு முகம் காட்டாத நிஜாமையும் , முகம் காட்ட வைத்ததே நட்பின் பெட்பு!

    ReplyDelete
  9. சேகரப் புதையலே நட்பு
    சோதனை விடைகளே நட்பு
    சாகர விடியலே நட்பு
    சாதனைத் தூண்டுதல் நட்பு
    தாகமேத் தீர்த்திடும் நட்பு
    தாயினைப் போலவே நட்பு
    வேகமாய்ச் செயல்படும் நட்பு
    வேரிலே உறுதியாம் நட்பு

    ReplyDelete
    Replies
    1. நட்பின் கவிதை அருமை !

      நன்றி கவிக்குறள்

      Delete
  10. நட்பினைப் பற்றி நான் சமூக விழிப்புணர்வு பக்கங்கள் எனும் எங்களது ஒருங்கிணைந்த இணைய தளத்தில் ''என் ஃபிரண்டைப் போல யாரு மச்சான்''என்ற தலைப்பில் கட்டுரை எழுதி உள்ளேன் .கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK-ல் சென்று வாசித்து அறிந்து கொள்ளவும்.
    http://nijampage.blogspot.ae/2014/01/blog-post_22.html

    ReplyDelete
  11. தோழா தோழா,
    கனவு தோழா,
    தோழா தோழா,
    தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
    நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்திக்கணும்,

    உன்ன நான் புரிஞ்சுக்கணும்,
    ஒன்னொன்னா தெரிஞ்சுக்கணும்,
    ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா,
    காதல் ஆகுமா?
    அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்,
    நட்பு மாறுமா?

    நட்புக்குள் பொய்கள் கிடையாது,
    நட்புக்குள் தவறுகள் நடக்காது,
    நட்புக்குள் தன்னலம் இருக்காது,
    நட்புக்கு ஆண் பெண் தெரியாது,
    நட்பு என்னும் நூல் எடுத்து,
    பூமிய கட்டி நீ நிறுத்து,
    நட்பு நட்புதான்,
    காதல் காதல்தான்,
    காதல் மாறலாம்,
    நட்பு மாறுமா?

    தோழமை வாழ்க! தொடருட்டும் உங்கள் நட்பு! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நட்பின் கவிதை அருமை !

      நன்றி காக்கா

      Delete
  12. இந்த நட்புப் பாடல் பாண்டவர் பூமியில் மட்டுமல்ல . யார் ஆண்டவர் பூமியில் தோண்டினாலும் மாற்றுக் குறையாத தங்கமாகவே கிடைக்கும்.

    ReplyDelete
  13. பதிவுக்கு நன்றி.

    அருமையான பதிவு, நண்பர்கள் பல ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கும் பொது எதை பேசுவது என்று தெரியாமல் திக்கு முக்காடுவார்கள், இதை தவிர்க்க ஒருநாளை இதுகென்று ஒதுக்கி ஜாலியாக இருங்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜமால் காக்கா

      அருகில் இருந்தும் உங்களையும் கேமிராவுக்குள் கொண்டுவர முடியவில்லை

      Delete
    2. இன்னும் நேரம் இருக்குது, நான் அருகில் வர.

      Delete
  14. இது ரொம்ப முக்கியம். 20 30 பேர் இல்லை 2. 3 பேர் இவர்கள் கூட்டணி நட்பினில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  15. Ansari Cap Mart அன்சாரி காக்கா அவர்கள் அதிரையைச் சேர்ந்த அகவை அறுபதைத் தாண்டிய நண்பர்களுடைய ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவேண்டுமென்று கேட்டு இருக்கிறார்கள்.

    இன்ஷா அல்லாஹ் இது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

    ReplyDelete
    Replies
    1. சிறந்த முயற்சி !

      ஏற்பாடு செய்யுங்கள் - உதவ நான் தயார்

      Delete
  16. அஸ்ஸலாமு அலைக்கும்,
    நீண்ட நாட்களுக்குப் பின் என் பாசமுள்ள மாணவர்களைப் பார்ப்பதில் மெத்த மகிழ்ந்தேன்
    Jazakkallah Khairan
    N.A.Shahul Hameed

    ReplyDelete
    Replies
    1. வலைக்கும் முஸ்ஸலாம்

      சார் நலமா ?

      நீண்டகாலமாகிவிட்டது உங்களை சந்தித்து

      கல்லூரி காலங்களில் எளிமைக்கு சிறந்த இலக்கணமாக திகழ்ந்தீர்கள். என்றென்றும் எங்களோடு சிறந்த நட்பை பேணி வந்தீர்கள்.

      உங்களின் கருத்துரையை கண்டு நாங்கள் மகிழ்ச்சயடைந்தோம். மிக்க நன்றி ஸார் !

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.