அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 11 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டியின் பத்தாம் நாள் ஆட்டம் இன்று [ 28-05-2014 ] மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கோட்டையூர் அணியினரும், தஞ்சை அருள் அணியும் மோதினார்கள். விருவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 3 கோல் அடித்து தஞ்சை அருள் அணியினர் வெற்றி பெற்றனர்.
இன்றைய ஆட்ட நிகழ்சிகள் அனைத்தையும் SIS முஹம்மது இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். இன்று நடைபெற்ற ஆட்டங்களின் பிராதான அம்பயராக வாசுதேவனும், இவருக்கு உதவியாக லோட்டஸ் நெய்னா, அஷரப் ஆகியோர் சிறப்பாக கையாண்டனர்.
வழக்கம் போல் இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.
நாளைய ஆட்டமாக அதிரை AFFA அணியினரும், நாகூர் கெளதியாஅணியும் மோத இருப்பதாக நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தனர்.
AFFA அணி ெவற்றி நிச்சயம் இன்சா அல்லாஹ்
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் இன்றைக்கு நாகூர் அணி வெற்றி பெறும் ......
ReplyDelete