.

Pages

Tuesday, May 27, 2014

அதிரை ஈசிஆர் சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் பலி !

அதிரை ஈசிஆர் சாலையில் இன்று மாலை கேரளாவை சேர்ந்த பயணிகள் ஏர்வாடியை நோக்கி ஆம்னி பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். பேருந்து அதிரை ஈசிஆர் சாலை பெரிய ஏரி அருகே சென்றுகொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் ஆவணத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளான விஜி ( 29), விக்கி ( 30 ) ஆகிய இருவரும் எதிரே வந்த பேருந்தில் எதிர்பாரதவிதமாக நேருக்குநேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் தமுமுக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தமுமுக ஆம்புலன்ஸ் இறந்த இரு உடல்களையும் பிரத பரிசோதனைக்காக அதிரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துசென்றது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிரை போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் விபத்து நடந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


8 comments:

  1. அதிரை நியூஸ் தளத்தில் இருந்து மூன்றவதாக உள்ள புகைப்படம் கோரமாக உள்ளதால் அதை எடுத்துவிட கேட்டுகொள்கிறேன்.

    ReplyDelete
  2. அடிக்கடி இச்சம்பவம் நடைபெறுவதை நாம் பார்க்கிறோம், விபத்துக்கள் அதிகமாகிக்கொண்டே தான் போகின்றன தவிர குறைய வில்லை, மக்களிடம் விழிப்புணர்வு குறைவு என்று தான் சொல்லவேண்டும்,

    பகல் நேரத்தில் கோரச்சம்பவம் நடப்பது பொது மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்த்துகிறது

    ECR ரோடு என்றாலே அது யமன் ரோடு என்று ஆகி விட்டது இதனை மாற்ற அரசு தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    சோகத்தில் மூழ்கி இருக்கும் அக்குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இறக்கங்கள்.

    ReplyDelete
  3. இரு இளைஞர்களை தவித்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்களையும் வல்ல ரஹ்மான் அன்னார்களின் குடும்பத்தினருக்கு இச்செய்தியை தாங்கும் மனவலிமையையும் கொடுக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. அடிக்கடி இச்சம்பவம் நடைபெறுவதை நாம் பார்க்கிறோம், விபத்துக்கள் அதிகமாகிக்கொண்டே தான் போகின்றன தவிர குறைய வில்லை, மக்களிடம் விழிப்புணர்வு குறைவு என்று தான் சொல்லவேண்டும்,

    பகல் நேரத்தில் கோரச்சம்பவம் நடப்பது பொது மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்த்துகிறது

    ECR ரோடு என்றாலே அது யமன் ரோடு என்று ஆகி விட்டது இதனை மாற்ற அரசு தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    சோகத்தில் மூழ்கி இருக்கும் அக்குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இறக்கங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

      Delete
  5. ரொம்ப பரிதாபத்திற்குரிய கோர சம்பவம். நெஞ்சம் கனத்துப் போய் விட்டது. அந்த இளைஞ்சர்களை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை. அவர்களின் மனம் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    இத்தகைய விபத்துக்கள் அடிக்கடி நமதூர் பகுதிகளில் நிகழ்ந்தும் வேகத்தைக் குறைத்து நிதானத்தை கடைபிடிக்க தவறி விடுகின்றனர். முறையான விதிமுறைப்படி வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டினால் இத்தகைய விபத்துக்கள் ஓரளவு குறையும்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.