.

Pages

Saturday, May 10, 2014

முத்துப்பேட்டையில் மூன்று வயது சிறுவனை கடித்து குதறிய வெறி நாய் !

முத்துப்பேட்டை அடுத்த பேட்டை காமென்டி தெரு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கௌசிக்(3). நேற்று மதியம் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த போது அப்பகுதியில் சுற்றி திரிந்த வெறி நாய் ஒன்று சிறுவனை கடித்து குதறியது. இதில் சிறுவன் கௌசிக் முகம் மற்றும் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. உடன் பெற்றோர்கள் முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு நாய் கடிக்கு மருந்துகளும், வசதிகளும் இல்லை என்பதால் டாக்டர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வம் கூறுகையில்: முத்துப்பேட்டை மாவட்டத்தில் ஒரு பெரிய ஊர், இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அனைவருக்கும் இந்த மருத்துவ மனை தான் உதவி. மேலும் தாலுக்கா தலை நகராக அறிவிக்கப்பட்ட இந்த முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்தவ மனையாக மாற்றாமல் அரசு கால தாமதம் படுத்தி வருகிறது. அதன் வகையில் இன்று நாய் கடித்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இனியாவது இந்த மருத்துவ மனையில் அனைத்து வசதிகளும் அரசு செய்து தர வேண்டும் என்றார்.

நன்றி : 'நிருபர்' முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை

4 comments:

  1. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் நிலைமைகள் இப்படி தான் இருக்கின்றனர், டாஸ்மாக் வரும் வருமானத்தில் கொஞ்சமாவது சுகாதாரமையங்களுக்கு செலவு செய்யலாமே! இலவசத்துக்கு ஒதுக்கும் கோடிகளை கல்வி துறை, சுகாதாரதுறைக்கு ஒதுக்கலாமே! செய்தார்களா? இல்லையே! இந்த அரசுக்கு மக்கள் சாவு மணி அடிப்பார்கள்.

    விரைவில் சிறவன் கௌசிக் குணமடைய பிராத்திப்போம்.

    ReplyDelete
  2. விரைவில் சிறவன் கௌசிக் குணமடைய பிராத்திப்போம்.

    ReplyDelete
  3. குழந்தைகள் சம்பந்தமான செய்திகளை அதிகளவில் காண முடிகிறது. ஒன்று பெற்றோரின் கவன இன்மை மற்றொன்று அரசின் கவன இன்மை.

    சென்னை,சேலம்,திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் குழந்தை ஆள் மாற்றம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் எலி,கரப்பான் போன்றவை விளையாடியது.ஏப்ரல் மாதம் அதிகளவில் பேசப்பட்ட குழந்தைகள் போர்வெல் குழியில் சிக்கியது.
    இன்று இந்த சிறுவன் வெறி நாய்டம் சிக்கியுள்ளான்.
    வருமுன் காப்பாது அரசின் கடமை மட்டுமல்ல பெற்றோர்களின் கடமைகூட!!!

    ReplyDelete
  4. ஒரு வேண்டுகோள்...இம்மாதிரியான புகைப்படங்களை பதியும் முன் இளகிய மனமுடையோர் தவிர்க்கலாம் என்ற சின்ன அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம் என்பது என் கருத்து... செய்தியை முந்தி தருவதில் இருக்கும் கவனம் இம்மாதிரியான விஷயங்களில் இருப்பது நல்லது.....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.