.

Pages

Sunday, May 18, 2014

நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் TNTJ நடத்திய கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு !

நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் TNTJ நடத்தும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று [ 18-05-2014 ] காலை துவங்கியது. இதில் மாணவரணி பொறுப்பாளர் பொறியாளர் உமர் பாருக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு எதிர்கால கல்வி குறித்த தேவையான தகவலை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் ஃப்ர்தெளஸி, TNTJ நகர தலைவர் பீர் முஹம்மது, துணைதலைவர் M.I. அப்துல் ஜப்பார், பொருளாளர் மீரா மற்றும் ஏனைய பொறுப்பாளர்கள் ஹாஜி முகம்மது, தமீம், ஜமால் முஹம்மது, SP பக்கீர் முஹம்மது, AKS நவாஸ் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். மாணவர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கு பொறியாளர் உமர் பாருக் சளைக்காமல் பதிலளித்தார்.

முன்னதாக தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் ஃப்ர்தெளஸி நிகழ்ச்சியின் அறிமுக உரை நிகழ்த்தினார். வந்திருந்த அனைவருக்கும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.