தனக்கு சொந்தமான நிலத்தில் நுழையவிடாமல் தடுத்து வேறு நபருக்கு விற்க முயற்சி செய்யும் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் 2 கால்களையும் இழந்த ஆட்டோ டிரைவர் முஹமது அலி நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் சுப்பையனிடம் ஆட்டோ டிரைவர் முஹமது அலி கோரிக்கை மனு கொடுத்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
அதிராம்பட்டினம் ஏரிக்கரைப்புறை கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தை அனுபவித்து வந்து ஒருவரிடமிருந்து ரூ.70 ஆயிரத்திற்கு கடந்த 7 ஆண்டுக்கு முன் நிலத்தை வாங்கினேன். சென்ற ஆண்டு இந்த இடத்திலிருந்து என்னை காலி செய்துவிட்டு வேறுநபருக்கு இடத்தை விற்க ஏரிக்கரைப் புறை ஊராட்சி தலைவர் முத்துக்கிருஷ்ணன் முயற்சி செய்து வருகிறார். எனவே அந்த இடம் எனக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் :
எனது கோரிக்கையை வலியுறுத்தி இதுவரை 18 முறை கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மனைவி சாகிதாபேகம், மகன் முகமது இசார்த், மகள் சாலிகா ஆகியோருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளேன். 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த ரயில் விபத்தில் ஒரு காலை இழந்தேன். 6 ஆண்டுகளுக்கு முன் ஒரு கால் செயல்படாமல் போனதால் மற்றொரு காலையும் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு தற்போது 2 கால்களையும் இழந்து தவித்து வருகிறேன். தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறேன் என்றார்.
நன்றி : தினகரன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.