இன்றைய ஆட்டத்தில் பொதக்குடி அணியினரும், அதிரை AFFA அணியும் மோதினார்கள். இதில் AFFA அணியின் நட்சத்திர வீரர் அசரப் 4 கோல் அடித்து தனது அணி இலகுவாக வெற்றிபெற உதவியாக இருந்தார். கடைசி நேரத்தில் களத்தில் இறங்கிய ஆசிப் ( கொய்யாப்பழம் ) தனது பங்குக்கு 1 கோல் அடித்தார். இதைதொடர்ந்து புருகான் 1 கோல் அடித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் அதிரை AFFA அணியினர் 6 கோல் அடித்து வெற்றி பெற்றனர்.
இன்றைய ஆட்ட நிகழ்சிகள் அனைத்தையும் SIS முஹம்மது இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். இன்று நடைபெற்ற ஆட்டங்களின் பிராதான அம்பயராக வாசுதேவனும், இவருக்கு உதவியாக அஜார், சம்சுல் ஹக் ஆகியோர் சிறப்பாக கையாண்டனர். இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.
நாளைய ஆட்டமாக காரைக்கால் அணியினரும், கோட்டையூர் அணியும் மோத இருப்பதாக நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தனர்.
அசரப் வின் ஆட்டம் மிக சிறப்பாக இருந்தது.இதே போல் அடுத்த ஆட்டத்திலும் ஆடினால் Affa இறுதிப்போட்டியிலும்வெற்றி பெரும் இன்ஷா அல்லாஹ்
ReplyDelete