.

Pages

Sunday, May 11, 2014

அதிரையில் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற மந்திரமா !? தந்திரமா !? நிகழ்ச்சிகள் ! [ படங்கள் இணைப்பு ]

ADTயால் அறிவிக்கப்பட்டபடி வெள்ளிக்கிழமை மாலை (09.05.2014) பிலால் நகர் தர்பியா மையத்திலும் சனிக்கிழமை மாலை (10.05.2014) A L மெட்ரிக் பள்ளியிலும் நடந்த மந்திரமா? தந்திரமா? என்ற நேரடி செயல்முறை விளக்க நிகழ்ச்சியில் ஏராளமான பெண்களும் மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்பும், இடையிடையேயும், முடிவாகவும் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மக்களுக்கு விளக்கங்களை கூறி தெளிவுபடுத்தினார். நிகழ்ச்சி இறுதியிலும் பெண்கள் தாமாக முன்வந்து கேள்வி எழுப்பி தெளிவுபெற்றுச் சென்றது பெண்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கத்தை உணர முடிந்தது.








ஏமாற்றுப்பேர்வழிகளால் மந்திரம் என நம்பவைத்து மோசடி செய்யப்படும் அனைத்தும் தந்திரமே என நேரடி செயல்முறை விளக்கத்துடன் நிறுவி நிகழ்ச்சியை குழந்தைகளின் குதூகலத்துடன் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.



ஜின் ஆபரேசன்

முன்னதாக, இன்று காலையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு 'இந்திய சுதந்திரப் போரில் முஸ்லீம்களின் வீர வரலாறு' எனும் தலைப்பின் கீழ் மறைக்கப்பட்ட வரலாற்றையும், வீர் சவர்க்கார் போன்ற தேசத்துரோகிகள் தியாகிகளாக போற்றப்படும் இழிவையும், வாஸ்கோட காமா என்ற வந்தேறி முஸ்லீம் ஹஜ் யாத்ரீகர்களுக்கு நடுக்கடலில் நிகழ்த்திய அட்டூழியங்களை பட்டியலிட்டும், வரலாற்று பக்கங்களில் மதச்சாயம் பூசி மறைக்கப்பட்டுள்ள, முஸ்லீம்கள் நம் தேச விடுதலைக்காக செய்த எண்ணிலடங்க தியாகங்களை மிக எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணமும் எடுத்துரைத்தார்கள்.

இன்ஷா அல்லாஹ் இன்று மாலை நடைபெறும் உளவியல் வகுப்பில் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும் பயிற்சிகள் வழங்கப்படக்கூடும்.

களத்திலிருந்து அதிரை அமீன்

தகவல் : அதிரை அமீன்

7 comments:

  1. நம்ம ஊருலே சில ' L ' கணக்கர்கள் பால் கணக்கு என்று ஒன்னு போட்டு குறி எல்லாம் சொல்லுறாங்கலாமே அதை எந்த
    Auditor கண்டுபிடித்தது? கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கப்பா ??

    ReplyDelete
  2. ஸஹீஹுல் புகாரி 7274. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் 'நம்பியே ஆகவேண்டிய' அல்லது 'பாதுகாப்புப் பெற்றே தீர வேண்டிய' நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ) தான். எனவே, நபிமார்களிலேயே மறுமைநாளில், பின்பற்றுவோர் அதிகமுள்ள நபியாக நானே இருப்பேன் என எதிர்பார்க்கிறேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.9
    Volume:7,Book:96.

    ReplyDelete
  3. இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுஇடங்களிலும் நடத்தவேண்டும்
    மக்கள்மத்தியில் மடமையை களைய வேண்டும். நன்றி!

    ReplyDelete
  4. இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுஇடங்களிலும் நடத்தவேண்டும்மக்கள்மத்தியில் மடமையை களைய வேண்டும். நன்றி!

    ReplyDelete
  5. இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுஇடங்களிலும் நடத்தவேண்டும்மக்கள்மத்தியில் மடமையை களைய வேண்டும். நன்றி!

    ReplyDelete
  6. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ) தான். எனவே, நபிமார்களிலேயே மறுமைநாளில், பின்பற்றுவோர் அதிகமுள்ள நபியாக நானே இருப்பேன் என எதிர்பார்க்கிறேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.9
    Volume:7,Book:96.

    இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுஇடங்களிலும் நடத்தவேண்டும்
    மக்கள்மத்தியில் மடமையை களைய வேண்டும்.

    நன்றி!

    மான் ஷேக்

    ReplyDelete
  7. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ) தான். எனவே, நபிமார்களிலேயே மறுமைநாளில், பின்பற்றுவோர் அதிகமுள்ள நபியாக நானே இருப்பேன் என எதிர்பார்க்கிறேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.9
    Volume:7,Book:96.

    இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுஇடங்களிலும் நடத்தவேண்டும்
    மக்கள்மத்தியில் மடமையை களைய வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.