முன்னதாக சலாமத் மக்தப் மாணவர்கள் அன்று மாலை ஊர்வலமாக வந்து பெரிய ஜும்மா பள்ளியில் சலவாத் பைத்துகள் ஓதினார்கள். மிஃராஜ்
இரவை இவர்கள் வரவேற்ற விதம் மகிழ்வைத் தந்தது. மஃரிபு தொழுகைக்குப்பின் அதிரை அனைத்து மஹல்லா இமாம்கள் அனைவரும் ஒன்றுகூடி மவ்லிது ஓதினார்கள்.
இஷா தொழுகைக்குப் பின் அதிரை கவிஞர் மு. முஹம்மது தாஹா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் சிறப்புரையின் ஊடே அதிரை அண்ணாவியார் அவர்கள் மிஃராஜ் பற்றிப் பாடியப் பாடலைப் பாடி அதனை விளக்கினார்கள். நமது ரஹ்மானியா மதரசா பேராசிரியர் மவ்லவி நெய்னா ஆலிம் அவர்கள் மிஃராஜ் விளக்கங்கள் தந்தார்கள். அவர்கள் சிறப்புரையில் இந்த பெரிய ஜும்மா பள்ளியை நிர்மாணித்த சின்னானி லெப்பை ஆலிம் அவர்களையும், அவர்களின் மிகச் சிறப்பான மாணவரும், உமறுப்புலவர், சீதக்காதி வள்ளல் வாழும் களத்தில் வாழ்ந்தவருமான சதக்கத்துல்லா அப்பா அவர்களையும் நினைவு கூர்ந்தார்கள்.
மிஃராஜ் நிகழ்வை தெளிவாகப் புரிந்து அல்லாஹ்வின் வணக்கம் பரிபூரணமாக தொழும் நிலையை அனைவரும் அடையவேண்டும் என்பது வழியுறுத்தப்பட்டது.
சென்ற 18-05-2014 அன்று அதிரை கவிஞர் மு. முஹம்மது தாஹா அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற சிறுவர்-சிறுமியர் பேச்சுப் போட்டியில் முதலிடம் வென்ற செல்வி M. ஜுல்ஃபா விற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரத் தலைவர் ஜனாப் K.K. ஹாஜா அவர்கள் பரிசுத் தொகை Rs.1000/-ம் வழங்கினார்கள். மற்ற நினைவுப் பரிசுகளைத் தலைவர் ஹாஜி M.M.S. ஷேக் நஸ்ருத்தீன் அவர்களும், உஸ்வத்துன் ஹசன மீலாது குழு ஜனாப் M.அப்துர்ரஹ்மான் அவர்களும் வழங்கினார்கள். துவாவுடன் விழா இனிதே நிறைவுப் பெற்றது.
செய்தி மற்றும் புகைப்படங்கள் : சேக் அப்துல்லா
அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteஇப்படிப்பட்ட பள்ளிகளில் நடத்த அனுமதிப்பது மிகவும் வருத்ததுகூரிய விசயமாகும் மாறாக மிஃராஜ் பற்றி முளு விவரங்களை மக்களுக்கு அறியவைக்க ஒருமணிநேரம் போதுமானதாகும் அதற்காக ஊர் சுற்றி ஊர்வலம் வந்து மௌலூத் என்ற பெயரில் மக்களை கூட்டி இதை ஓதினால் உங்களுக்கு பரகத் என்ற இஸ்லாதிக்கு முற்றிலும் மாற்றமாக நமது உயிரிலும் மேலானே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்கள் வலி நடந்த சத்திய சஹாபாக்களும் கடைபிடிக்காத இப்படிப்பட்ட பித் அத்தான நிகழ்ச்சிகளை நடத்தி இறைவீட்டைகறைபடிய வைத்து விடாதீர்கள்
இஸ்லாத்தையும் அதன் தூய வடிவில் கற்றுத்தரவேண்டிய குழந்தைகளுக்கு மிஃராஜ்ஜில் இரவில் நடந்த நிகழ்வுகளைப்பற்றையான தொகுப்பை தராமல் அவர்களை ஊர்சுற்றி வரச்செய்து தங்களது வருமானத்திற்காக இயற்றப்பட பாடலை அவர்களுக்கும் கற்றுக்கொடுத்து சீர்கேட்டில் தள்ளப்பார்க்கும் எமது கண்ணிவான்களே அல்லாஹுக்கு பயந்து நடந்துக்கொள்ளுங்கள்
இதுபோன்ற மார்கத்தில் காட்டிதரபடாதே மார்க்கம் என்ற பெயரில் ஓதும் அணைத்து கனவான்களும் தங்களது பள்ளிவாசல்களில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி நடந்தால் மற்றவர்களை புகைப்படம் எடுக்ககூடாதென்று வாய்கிழிய வாதிடும் இவர்கள் எப்படி தங்களை புகைபடம்பிடிக்க அனுமதித்தார்கள் அப்போ தெருவுக்கு அல்லது தான்சார்ந்த முகல்லாவுக்கு ஒரு நியாயம் மற்ற தெருவுக்கு அல்லது மற்ற முகல்லாவுக்கு ஒரு நியாயமா?
சிந்திந்து செயல்படக்கூடிய நமது மார்க்கத்தில் இதுபோன்ற பித் அத்தான நிகழ்ச்சிகளில் தானும் தங்களது குழந்தைகளையும் கலந்து கொள்ளாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன்
இப்படிப்பட்ட மார்க்க நாகரிகமற்ற வழிகேட்டில் மூழ்கி கிடக்கும் லெப்பை ஆலிம் பெருமக்களுக்கும் இஸ்லாத்தை அதன் துய்ய வடிவில் அறிந்து பிறருக்கும் அறிய செய்ய அல்லாஹ் பேருதவி புரிவானாக ஆமீன்
அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteஇப்படிப்பட்ட நிகழ்வுகளை பள்ளிகளில் நடத்த அனுமதிப்பது மிகவும் வருத்ததுகூரிய விசயமாகும் மாறாக மிஃராஜ் பற்றி முளு விவரங்களை மக்களுக்கு அறியவைக்க ஒருமணிநேரம் போதுமானதாகும் அதற்காக ஊர் சுற்றி ஊர்வலம் வந்து மௌலூத் என்ற பெயரில் மக்களை கூட்டி இதை ஓதினால் உங்களுக்கு பரகத் என்ற இஸ்லாதிக்கு முற்றிலும் மாற்றமாக நமது உயிரிலும் மேலானே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்கள் வலி நடந்த சத்திய சஹாபாக்களும் கடைபிடிக்காத இப்படிப்பட்ட பித் அத்தான நிகழ்ச்சிகளை நடத்தி இறைவீட்டைகறைபடிய வைத்து விடாதீர்கள்
இஸ்லாத்தையும் அதன் தூய வடிவில் கற்றுத்தரவேண்டிய குழந்தைகளுக்கு மிஃராஜ்ஜில் இரவில் நடந்த நிகழ்வுகளைப்பற்றையான தொகுப்பை தராமல் அவர்களை ஊர்சுற்றி வரச்செய்து தங்களது வருமானத்திற்காக இயற்றப்பட பாடலை அவர்களுக்கும் கற்றுக்கொடுத்து சீர்கேட்டில் தள்ளப்பார்க்கும் எமது கண்ணிவான்களே அல்லாஹுக்கு பயந்து நடந்துக்கொள்ளுங்கள்
இதுபோன்ற மார்கத்தில் காட்டிதரபடாதே மார்க்கம் என்ற பெயரில் ஓதும் அணைத்து கனவான்களும் தங்களது பள்ளிவாசல்களில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி நடந்தால் மற்றவர்களை புகைப்படம் எடுக்ககூடாதென்று வாய்கிழிய வாதிடும் இவர்கள் எப்படி தங்களை புகைபடம்பிடிக்க அனுமதித்தார்கள் அப்போ தெருவுக்கு அல்லது தான்சார்ந்த முகல்லாவுக்கு ஒரு நியாயம் மற்ற தெருவுக்கு அல்லது மற்ற முகல்லாவுக்கு ஒரு நியாயமா?
சிந்திந்து செயல்படக்கூடிய நமது மார்க்கத்தில் இதுபோன்ற பித் அத்தான நிகழ்ச்சிகளில் தானும் தங்களது குழந்தைகளையும் கலந்து கொள்ளாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன்
இப்படிப்பட்ட மார்க்க நாகரிகமற்ற வழிகேட்டில் மூழ்கி கிடக்கும் லெப்பை ஆலிம் பெருமக்களுக்கும் இஸ்லாத்தை அதன் துய்ய வடிவில் அறிந்து பிறருக்கும் அறிய செய்ய அல்லாஹ் பேருதவி புரிவானாக ஆமீன்
ஆதாரமற்ற செய்திகளும் சேதாரமற்ற சன்மார்க்கமும்
ReplyDeleteஅன்புள்ள சகோதர சகோதரிகளே!
இதுவரைக்கும் இஸ்ரா-மிஃராஜ் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீது கூறும் செய்திகளைப் படித்தீர்கள். இஸ்ரா என்பது இரவில் பிரயாணம் செய்தல் என்பதாகும், அதாவது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து பைத்துல் மக்திசுக்கு புராக்கில் சென்ற பிரயாணத்திற்கு சொல்லப்படும். மிஃராஐ; என்பது ஏழு வானங்களை கடந்து சென்றதற்கு சொல்லப்படும். இஸ்ரா குர்ஆனிலும் ஹதீதிலும் கூறப்பட்டிருக்கின்றது, மிஃராஐ; என்பது ஹதீதில் மாத்திரம் கூறப்பட்டிருக்கின்றது. இவ்விரண்டும் குர்ஆன் ஹதீதின் மூலம் கூறப்பட்ட செய்தி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அது எந்த மாதம் எத்தனையாம் தேதி நிகழ்ந்தது என்பது பற்றி குர்ஆனிலோ ஹதீதிலோ கூறப்படவில்லை. அது எப்போது நிகழ்ந்தது என்பது பற்றி அறிஞர்கள் பல கருத்துக்கணிப்புகளைக் கூறுகின்றார்கள். அவைகள் பின்வருமாறு.
1- நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த வருடம். (இதை தப்ரி இமாம் கூறுகின்றார்கள்)
2- நபித்துவம் கிடைத்து ஐந்து வருடத்திற்கு பின். (இதை நவவி , தப்ரி இமாம்கள் கூறுகின்றார்கள்)
3- நபித்துவம் கிடைத்து பத்து ஆண்டுகளுக்கு பின் ரஜப் மாதம் பிறை 27ல். (இதை அல்லாமா மன்சூர் பூரி அவர்கள் கூறுகின்றார்கள்)
4- நபித்துவம் கிடைத்து 12ம் ஆண்டு ரமழான் மாதத்தில். (ஹிஜ்ரத் செல்வதற்கு 16 மாதங்களுக்கு முன்)
5- நபித்துவம் கிடைத்து 13ம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில். (ஹிஜ்ரத் செல்வதற்கு 14 மாதங்களுக்கு முன்)
6- நபித்துவம் கிடைத்து 13ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதத்தில். (ஹிஜ்ரத் செல்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்)
இஸ்ரா, மிஃராஜ் என்பது எப்போது நடந்தது என்பது பற்றி அறிஞர்கள் தற்போது கூறிய கருத்துக்கள் ஒரு கணிப்பே தவிர எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் சொல்லப்பட்டதல்ல. அது எப்போது நடந்தது என்பதை நாம் அறிந்திருந்தாலும் கூட அந்த நாளை சிறப்புக்குரிய நாளாக கொண்டாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை, காரணம் ஒரு நாளை அல்லது ஒரு மாதத்தை சிறப்புக்குரிய நாளாக அல்லது சிறப்புக்குரிய மாதமாக கருதுவதாக இருந்தால் அது அல்லாஹ்வின் மூலமாக அல்லது நபி (ஸல்) அவர்கள் மூலமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும், நபி (ஸல்) அவர்கள் இஸ்ரா, மிஃராஜ் சென்று வந்ததர்க்குப்பிறகு குறைந்தது பத்து ஆண்டாவது உயிருடன் வாழ்ந்திருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு தடவையாவது மிஃராஜுக்கு விழா நடத்தியதாக அல்லது அந்த நாளை சிறப்புக்குரிய நாளாகக் கருதியதாக நாம் பார்க்கவே முடியாது. நபி (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்று எப்படி நம்மிடம்; மார்க்கமாக முடியும்? இன்று முஸ்லிம்களில் பலர் ரஜப் மாதத்தின் 27ம் இரவை மிஃராஜ் இரவாக எண்ணி அந்த இரவில் அமல்கள் செய்தால் மற்ற நாட்களில் கிடைக்கும் நன்மைகளை விட அதிக நன்மைகள் கிடைக்கும் என நினைத்து தொழுகை, குர்ஆன் ஓதுவது, உம்ரா, நோன்பு, தர்மம் போன்ற அமல்களை அதிகம் செய்கின்றார்கள். இன்னும் சிலர் குறிப்பிட்ட உணவுகளை சமைத்து தர்மமும் செய்கின்றார்கள். இப்படிச்செய்வது இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை உருவாக்கிய பித்அத் என்னும் பெரும் பாவமாகும்.
ReplyDeleteமார்க்கம் என்கிற பெயரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும். பித்அத்தில் நல்லது கெட்டது என்று பிரிக்க முடியாது. அனைத்து பித்அத்துக்களும் வழிகேடுதான். பின்வரும் ஹதீது அதை தெளிவு படுத்துகின்றது.
ஹதீதின் பகுதி : இஸ்லாத்தில் புததிதாக ஒன்றை உருவாக்குவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன், புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழகேடாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸில்ஸிலா ஸஹீஹா)
நஸாயியின் அறிவிப்பில்: ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் இட்டுச் செல்லும். என்று வந்திருக்கின்றது.
காரியங்களில் மிகக்கெட்டது இஸ்லாத்தில் புதிதாக உருவாக்கப்பட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத்ததகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும், ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் இட்டுச் செல்லும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் நஸாயி)
யார் எமது மார்க்த்தில் இல்லாத ஒன்றைப் புதிதாக ஆரம்பிக்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
இன்னும் ஒரு அறிவிப்பில் :-
யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றைச் செய்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
நமது ஒவ்வொரு வணக்கமும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகள் அவசியம்.
1-அல்லாஹ்வுக்காக அந்த வணக்;கம் செய்யப்பட வேண்டும்.
2-நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறைப்படி செய்யப்பட வேண்டும்.
இந்த நிபந்தனைகளின்படி ரஜப் மாதத்தின் 27ம் இரவை மிஃராஜின் இரவாக கொண்டாடுவது பித்அத்தாகும். காரணம் அது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த ஒன்றல்ல. ஆகவே! ரஜப் மாதத்தின் 27ம் நாளை சிறப்புக்குரிய நாளாகக் கருதாமல் மற்ற சாதாரண நாட்களைப்போன்றே கருத வேண்டும்.
மார்க்க விசயம், விருந்து , சமூக பிரச்சனை இதில் எதிலும் ஒற்றுமை பார்க்க முடியாது, ஒவ்வொரு வருடம் நடப்பது நடந்துக்கொண்டே தான் இருக்கு வேற எதற்கு விவாதம்?
ReplyDeleteமார்க்க விசயத்தில் விவாதம் பண்ண நம்ம மக்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை அவ்வப்போது நிரூபிப்பார்கள்!
Entha Thowhithwathi saraiya erukkan athe sollugappa ???
ReplyDeleteAvangalukku Oru Niyayam Aduthavangalukku Oru niyayam athuthan avanga seyalpadu ...
அமைப்புச் சாரா பொதுநல விரும்பி. என்பவர் எப்படி சுன்னத்துவல் ஜமாஅத் அமைப்பை குறை, தவறு என்று சொல்லமுடியும். முதல் தொடக்கமே குழப்பம். அதனால் வெளிப்படும் கருத்தும் குழப்பமாக இருக்காது என்று எதிபார்ப்புதான் தவறு.
ReplyDeleteஎத்தனையோ அமைப்புகள் அதில் எந்த அமைப்பையும் சேராதவர் என்றால், அதை சிந்தித்தால் குழப்பம்தான் தெரிகிறது. ஆக முகமூடிகள் ! புனைப்பெயரும் அல்ல ! ஆதாரம் கேட்க்கும் இன்றைய சில இளைஞர்கள் மத்தியில் இது ஒரு புதுமை !! அதாவது அரபியில் பித்அத்.
இஸ்லாமிய அமைப்பில் மிஃராஜ் என்பது உண்டு. அதை வளரும்/வளர்ந்துவரும் சமுதாயங்களுக்கு நினைவூட்டி, விளக்கங்கள தருவது இஸ்லாமியன் தலைமீது எழுதிய கடமை. இதுபோன்ற புனித தினங்களை ஞாபகம் செய்யாவிடில்/விளக்கங்கள் தராவிட்டில் புதுமைகள் தோன்றுவது தடுக்கமுடியாது என்பதைத்தான் இவர்களின் கருத்துக்கள் தெரிவிக்கின்றது.
அதிரை மடல். அதிராம்பட்டினத்தில் உள்ள ஒரு கடிதம். கடிதங்கள் தன் மீது எழுதப்பட்டது இன்னது என்று அறிந்துக்கொள்ள அதனால் முடியாது. எது எழுதப்பட்டதோ அதை அப்படியே காட்டும். அதாவது எது இதயத்தில் முத்திரையாக குத்தப்பட்டதோ அதுதான் வெளிப்படும். அதன் சுபாவம் அவ்வாறிருக்க மாற்றங்கள் எதிர்பார்ப்பது தவறு.
ஒவ்வொன்று என்று ஆன ஒன்றுக்கு உள்ளும் புறமும் உள்ளது என்பது மடல்கள் அறிந்திருக்கும்/அறிய வேண்டும் என்பதும் ஞாயமில்லைதான் ! மடலின் நோக்கம் கால-நேரத்தில் குழம்பி மிஃராஜ் என்பதையே மறக்கச் செய்யும் வழிதனில் கொண்டு செல்லவே விரும்புகிறது. ஆக விலகிச் செல்வதை யார் தடுக்கமுடியும் ?
எது சரி தவறு என்று கணித்து சென்றுவிட்ட காலங்ககள் சிலருக்க புரியாதுதான். அன்றே இமாம்கள் அதனை செப்பனிட்டுவிட்டார்கள் என்று சொன்னால் ஏறக்க மறுக்கும் இதயங்களை நாம் என்ன சொல்வது ?
"அவரவர் வழி அவரவர்களுக்கு" என்று வேதம் காட்டும் வழியை பின்பற்றுதலிலும் விலகி நின்றால் நாம் ஒதுங்குவதைத் தவிர வேறில்லை !
மிஃராஜ் பற்றி தெளிவாக அறியவேண்டும். எந்த அளவிற்கு தெளிவு ஏற்படுகிறதோ அந்த அளவிற்கு அல்லாஹ் (ஜல்) அவனுக்கு செய்யும் தொழுகை பூரணப்படும். இல்லையேல் "தொழுதபின் முகத்தில் திருப்பி எறியப்படும்" என்ற அறிவுரையை ஞாபகம் செய்ய வேண்டின், அவசியம் மிஃராஜ் நிகழ்வில் கலந்து அதன் அகமியங்களை அறிதுக்கொள்ளவேண்டும் என்ற உணர்வு ஏற்படுவது தவிர்க்க இயலாது. அறிய விரும்பாதோர் அல்லது தவறு என்று முத்திரை குத்தப்பட்ட இதயங்களுக்கு அல்லாஹ்வை அன்றி நேர்வழி காட்ட யாராலும் இயலாது.
செய்தியை எழுதிய என்னால் எழுத வேண்டிய நிர்பந்தம். அதனால் இக்கருத்தை வெளிப்படுத்துகிறேன். சமநிலை இதயம் புரிந்துக்கொள்ளும்.