
தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகின்றது.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். அதேபோல், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத் தேர்வை பள்ளிகளின் மூலமாக 10.38 லட்சம் மாணவர்களும், தனித்தேர்வர்களாக 74 ஆயிரம் மாணவர்களும் எழுதினர்.
வழக்கமான நேரத்துக்குப் பதிலாக, இந்த ஆண்டு 45 நிமிஷங்கள் முன்கூட்டியே (காலை 9.15 மணிக்கு) தேர்வுகள் தொடங்கின.
எஸ்.எம்.எஸ்.: 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு.
10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
என்ற இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளைப் பெற பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 53576 என்ற எண்ணுக்கு SSLC என டைப் செய்து தங்களது பதிவு எண்ணை மாணவர்கள் எஸ்.எம்.எஸ். அனுப்பி தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல், 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD என டைப் செய்து மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணையும், பிறந்த தேதியையும் எஸ்.எம்.எஸ். அனுப்பி தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி : தினமணி
பகல் 12.00 வரைக்கும் தெருவெல்லாம் அமைதியா?
ReplyDelete