.

Pages

Tuesday, May 20, 2014

பாதியில் நிறுத்தப்பட்ட செய்னாங் குளத்தின் பணிகளை முடித்துதர கோரி மாவட்ட ஆட்சியருடன் கீழத்தெரு ஜமாத்தினர் சந்திப்பு !

அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் கீழத்தெரு மஹல்லாக்கு உட்பட்ட புதுக்குடி பகுதியில் அமைந்துள்ள செய்னாங் குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை இதற்குரிய பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தொடர்ந்து நடைபெற வேண்டிய முக்கிய பணிகளில் சிலவற்றை கிடப்பில் போடப்பட்டதாக தெரிகிறது. பாதியில் நிறுத்தப்பட்ட செயனாங் குளத்தின் பணிகளை கீழத்தெரு சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து விரைந்து முடித்துதர கோரி புகார் மனு அளிப்பது என்ற முடிவு எடுத்தனர். இதைஅடுத்து நேற்று காலை கீழத்தெரு சங்க அலுவலகத்திலிருந்து அதன் முக்கிய நிர்வாகிகள் தஞ்சைக்கு புறப்பட்டுசென்றனர். மேலும் பேரூராட்சியின் இணை இயக்குனரிடமும் புகார் மனு அளிக்க உள்ளதாகவும் நம்மிடம் தெரிவித்தனர்.

கீழத்தெரு ஜமாத்தினர் சார்பில் கடந்த மாதம் அதிரை பேரூராட்சி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று பேரூராட்சியின் செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணைதலைவர் ஆகியோருக்கு தனித்தனியே கோரிக்கை மனுக்கள் எழுதி, அதில் குளத்தின் நிறைவுபெற வேண்டிய பணிகளை விரைந்து முடித்துதர துரித நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :


15 comments:

  1. இதிலே எப்படியும் ஒரு தீர்வு கிடைத்து விடும், மற்றும் சி.எம்.செல், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற லைனிலும் சென்று சரியான தீர்வை பெறமுடியும்.

    ஒவ்வொரு பகுதிகளிலும் நடக்கும் அரசு சார்ந்த வேலைகளை அப்பகுதி மக்கள் கண்டு கொள்ளாததினால்தான், இதுமாதிரி குற்றங்கள் நடைபெறுகின்றது.

    மக்கள் கிண்டி கேட்பதற்கு அஞ்சுகின்றனர். இடைவிடாமல் துளைத்துக் கொண்டிருக்கும் கீழ்த் தெரு ஜாமாத்தார்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. கீழத்தெரு ஜமாத்தார்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். அதிரையில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களை அதை கண்காணித்தேலே போதும் முழுவதும் வெற்றி அடையும். திட்டங்களை கண்காணிக்க ஆள் இல்லை என்றால் குளத்தை காணம் கதைதான்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கீழத்தெரு சங்கத்தின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. கீழத்தெரு சங்கத்தின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. கீழத் தெரு சங்கத்தின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் எத்தனை குளங்கள் சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டது யாருக்கு தெரியும்?

    இல்லாத குளங்களை புனரமைத்த்ததாக எழுதி வைத்திருக்கலாம் ஆகவே கலெக்டர் நேரில் ஆய்வு நடத்துவதே சரியானதாகும்.

    சங்க நிர்வாகிகளின் முயற்சிக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. சங்க நிர்வாகிகளின் முயற்சிக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அழைக்கும்
    தகவலுக்கு நன்றி

    முயற்சிக்கு நன்றி ஆனால் தாமதம் .
    அறிக்கையில் (குலம்)என்று தவறாக எழுத்து பிழை உள்ளது குளம்என்று எழுதவேண்டும்
    வஸ்ஸலாம் .

    ReplyDelete
  10. சங்க நிர்வாகிகளின் முயற்சிக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

    இதுபோலவே அண்மையில் போட்ட தார் ரோடு வரும் மழையில் பாதித்துவிடும்.ஆகவே கலெக்டர் இதனையும் நேரில் ஆய்வு நடத்துவதே சரியானதாகும்.

    ReplyDelete
  11. செட்டியா குளத்தை தூர் வாரி சுத்தம் செய்ததுபோல் இந்த குளத்தையும் சுத்தம் செய்வது காலத்தின் கட்டாயம்,

    திடீரென அறைகுறையாக பணி நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்ன? இதனை ஆராய்ந்து விரைவில் மீதமுள்ள பணி முடுக்கிவிடப் பட வேண்டும், இதற்கு அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.

    ReplyDelete
  12. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    அன்புள்ளம் கொண்ட அதிரை மக்களே, கீழத்தெரு ஜமாத்தார்கள் தொடுத்துருக்கும் (எய்திருக்கும்) இந்த கோரிக்கை வரவேற்கத்தக்கது, இதனால் நமதூருக்கே ஒரு விழிப்புணர்வு யுக்தி எல்லோர் மனதிலும் கண்டிப்பாக உதயமாகி இருக்க வேண்டும். இது போல் எத்தனை செயல்கள் மலர்ந்தும் மலராமல் இருக்கின்றன, யாருக்காவது அக்கறை இருந்ததா?

    இனிமேலும் காலம் தாழ்த்தாமல் அவரவர் பகுதிகளில் இருக்கின்ற குறைகளை தெரியப்படுத்த தயங்க வேண்டாம், ஏதோதுக்கோ நேரங்களை செலவு செய்து ஊரின் ஒவ்வொரு முக்கத்திலும் அமர்ந்து காலங்களை கடத்தும் அன்பர்கள் இருக்கும்வரை இந்த ஊர் உருப்படுவது என்றால் அது குதிரைக் கொம்பே.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  13. இக்குளத்தின் பணி முழுமை பெற வேண்டி பாடுபடும் அனைவர்களுக்கும் மிக்க நன்றி.

    மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது. அதுபோல சட்டப்படி அனுகாதவரை பலன் கிடைக்காது.
    இதை சமுதாய மக்கள் அனைத்து விசயத்திலும் கையாள வேண்டும்.

    ReplyDelete
  14. நம்ம ஊரில் உள்ள பற்பல நபர்களின் அலட்ச்சியத்தினால் எல்லா வேலைகளும் இப்படித்தான் இருக்கின்றது, இன்னும் சொல்லப் போனால் நமக்கு நம்ம ஆளே எதிரியாக இருக்கின்றான். நம்ம ஊர் இளைஞர்கள் பலர் நம்ம ஊரில் அரசு அனுமதி இல்லாமல் பல தகாத இடங்களில் பல நேரங்களில் சென்று சீரழிகின்றனர். இதை எப்படி தடுப்பது.

    பட்டுக்கோட்டை சாலையில், லாவண்யா திருமண மண்டபம் அருகில் அருண் வாட்டர் சர்வீஸ் இருக்கின்றது, இதுக்கு எதிர்புறம் வெள்ளக் குளம் கரையில் ஒரு கீற்று கொட்டகை கடை இருக்கின்றது, இது அரசுக்கு சொந்தமான இடம், இந்த கடையை நடத்துபவர் தேவதாஸ், இவர் பக்கத்தில் உள்ள காலனியை சேர்ந்தவர். இவரிடம் போனால் நமது இளைஞர்களுக்கு சொகுசான அடைக்கலம் கிடைக்கின்றது.

    உங்களுக்கு என்ன வேணும்? இதுதான் அங்கு கேட்கப்படுகின்ற கேள்வியாம். எது கேட்டாலும் இரண்டு நிமிடங்களுக்குள் எதுவாக இருந்தாலும் தயாராகிவிடும். நம்ம ஊர் இளைஞர்கள் பலர் பலதெருவுகளிலும் இருந்து இங்கு வந்து சீரழிந்து கொண்டு இருக்கின்றார்கள்.

    காவல் துறைகள், சமூக அமைப்புகள், சமூக சேவகர்கள், பொது மக்கள் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.