அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 8, 9 ஆகிய வார்டுகளில் நிலவிவரும் குடிநீர் தட்டுபாட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று காலை சாலைமறியல் போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் சார்பில் வெளியான அறிவிப்பை அடுத்து இன்று காலை பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர், அதிரை காவல்துறை ஆய்வாளர், குடிநீர் வாரிய உதவி பொறியாளர், அதிரை பேரூராட்சியின் சார்பில் செயல் அலுவலர், ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கடற்கரைதெரு ஜமாத்தினர் ஆகியோரால் நடத்தப்பட்ட இருதரப்பு சமாதான பேச்சுவார்த்தையின் முடிவில் கடற்கரைதெரு பகுதிக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது .
சமாதான கூட்டத்தில் இருதரப்பும் கையெழுத்திட்டு உறுதிசெய்து கொண்ட விவரங்கள் :
தமிழ் நாட்டில் மின்சாரத்தை தொகுதிவாரியாக பிரித்து கொடுத்து மக்கள் மின் வெட்டை அனுபவித்து வரும் வேலையில் ஒரே ஊரில் இப்போ தண்ணீரே பிரித்து கொடுக்கும் அவலநிலைமை ஏற்பட்டு இருக்கு,
ReplyDeleteஅரசு பல காரணங்கள் சொன்னாலும் மக்களும் சில சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது.
குடிநீரை வீண் விரயமாக செய்யாமல் பாதுகாக்க வேண்டும்.
மோட்டார் போட்டால் தண்ணீர் வரும் என்ற நிலைமை மாறி இப்போ போராட்டம் நடத்தினால் தண்ணீர் வரும் என்ற நிலைமைக்கு யார் காரணம் ?
தண்ணீர் சிக்கனம் இல்லையேல் !
கண்ணீர் இக்கணம் !!