.

Pages

Monday, May 19, 2014

அதிரையில் கடற்கரையோர அரசு நிலம் ஆக்கிரமிப்பை அதிரடியாக தடுத்து நிறுத்திய அரசு அலுவலர்கள் !

அதிரை ஈசிஆர் சாலையிலிருந்து நேராக கடற்கரைக்கு செல்லும் கஸ்டம்ஸ் சாலையின் முடிவில் வலதுபுறத்தில் உள்ள கடற்கரையில் அரசுக்கு சொந்தமான சில ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு இந்த பகுதியில் ஏராளமான மணல் குமிந்து சுற்றுலா தளமாக காட்சியளித்தது. சுனாமி தடுப்புக்காக அரசு சார்பில் ஏராளமான சவுக்கு மரங்களும் நடப்பட்டது.

அரசுக்கு சொந்தமான இந்த இடத்தில் கடந்த சில நாட்களாக இறால் பண்ணை அமைப்பதற்காக சிலர் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டதாக தெரிகிறது. தகவலறிந்த வருவாய் அலுவலர் பழனிவேல், ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலர் ஜோதி, அதிரை காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.





3 comments:

  1. அதிரை ரோடுகளிலும்,தெருக்களிலும் ஆக்கிரமிப்பு செய்து கட்டிவைத்து இருக்கும் இடங்களை மீட்டாலும் சரியே!!!

    ReplyDelete
  2. ஆக்கிரமிப்பு செய்வதாக அரசு அதிகாரிகள் வரவில்லை யாரோ வேண்டாத ஒருத்தர் போட்டு கொடுத்ததால் தான் வந்து இருக்கிறார்கள்,

    பார்க்க வேண்டிய இடத்தில் சரி கட்டி இருந்தால் இது வெளிசத்துக்கு வரப்போவதில்லை.

    இப்போதெல்லாம் அதிகாரிகளே பணத்தை வாங்கிக் கொண்டு வெண்ணிலா பத்திரம் கொடுத்து பிறகு பட்டா போடலாம் என்று சொல்லுகிறார்கள் - பிறகு என்னாவது என்று மக்களுக்கு தெரியப்போவதுமில்லை.

    அரசு நிலத்தில் மரங்களை வளர்த்தால் ஆக்கிரமிப்பை தவிர்க்கலாம் இதை செய்ய மாட்டார்கள் -

    யாரோ ஒருத்தன் போட்டு கொடுத்து வருவதால் பிறகு வெட்டு - குத்து தான் நடக்கும் இப்போ போலீஸ்க்கு இரண்டு பக்கமும் வசூல் தான் !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.