இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்த ஜமாபந்தி ஜூன் 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர நாள்தோறும் காலை 9 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. பட்டுக்கோட்டை வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஜூன் 4 முதல் 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இந்த ஜமாபந்தியில் நில உடைமையாளர்கள் பட்டா மாறுதல், நிலங்கள் குறித்த எல்லை பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல், பொதுமக்கள் வீட்டுமனை, சாகுபடி நில ஒப்படை, முதியோர் உதவித்தொகை பெறுதல் ஆகிய கோரிக்கைகள் குறித்தும் வருவாய் தீர்வாய அலுவலரிடம் மனு கொடுத்து தீர்வு பெறலாம். வருவாய் தீர்வாயத்தின் நிறைவு நாளில் அந்தந்த வட்டங்களில் வருவாய் தீர்வாய அலுவலர்களால் விவசாயிகள், பொதுப்பணித் துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண் பொறியியல் துறை, புள்ளியியல் துறை சார்ந்த உள்கோட்ட அலுவலர்கள் அடங்கிய கூட்டம் நடத்தப்படும். இதில், பாசனம் தொடர்பான கருத்துரு, முன்மொழிவுகள், கோரிக்கைகள் ஆகியவற்றை அளிக்கலாம்.
இனியெல்லாம் மக்களுக்கு நல்லதே நடந்த வண்ணம் இருக்கும்.
ReplyDeletemr.புரட்சி மின்னல் .. அம்மா திட்டம் போல இருக்கும் போல.. நாங்களும் கொடுத்தோம்.. இதுவரை பட்டாமாறுதலுக்கு விடை இல்லை ... லஞ்சம் இல்லாமல் வேலை இல்லை ...
ReplyDelete