.

Pages

Wednesday, May 21, 2014

புறக்கணிக்கும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிராக புகார் அளிக்க 14 வது வார்டு உறுப்பினர் முஹம்மது செஃரிப் முடிவு ! [ காணொளி ]

அதிரை பேரூராட்சியின் 14 வார்டுக்கு உட்பட்ட நடுத்தெரு மேல்புற பகுதிகளில் கடந்த 6 மாதமாக தொடர்ந்து முறையிட்டும் சீராக குடிநீர் வழங்கப்படவில்லை என்றும், அதிரை பேரூராட்சியின் சார்பாக நேற்று [ 20-05-2014 ] கூட்டப்பட்ட அவசர கூட்டத்தில் பங்கேற்க தமக்கும் ( NKS முஹம்மது செஃரிப் ), திமுகவை சேர்ந்த 13 வார்டு உறுப்பினர்கள் H. அப்துல் காதர், 1 வது வார்டு உறுப்பினர் அய்யாவு, 11 வது வார்டு உறுப்பினர் உம்மல் மர்ஜான் ( நகர திமுக துணை செயலாளர் அன்சார்கான் மனைவி ) ஆகியோருக்கு தகவல் தெரிவிக்க வில்லை என்றும், தொடர்ந்து புறக்கணிக்கும் அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம், தாம் ( அதிரை பேரூராட்சியின் 14 வது வார்டு உறுப்பினர் NKS முஹம்மது செஃரிப் ) புகார் அளிக்க இருப்பதை அனைவரிடமும் தெரிவித்துக்கொள்வதாக நம்மிடம் கூறுகிறார்.

6 comments:

  1. கடந்த ஆறு மாதமாக தண்ணீர் வரவில்லை என்று கூறும் நீங்கள் நடவடிக்கை எடுக்கவுமில்லை,அப்பகுதி மக்களும் மனு கொடுக்கவும் இல்லை. இதுலந்து என்னனு தெரியுது ?

    ReplyDelete
  2. இது கோஷ்டி பூசலால் தான் கூடத்திற்கு அழைக்க வில்லை , 11 வது வார்டு உறுப்பினர் தன் எதிர்ப்பை காட்ட இலவசமாக குடிநீர் மக்களுக்கு கொடுத்தார்,

    இன்னமும் எத்தனை கோஷ்டிகள் உள்ளது என்பதை வரும் தேர்தலில் தெரியும்.

    மக்களுக்கு தொண்டு, சேவை செய்பவர்களே மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    நாங்கள் பரம்பரை பரம்பரையாக DMK க்கு விசுவசாமாக இருப்போம் என்றால் மாற்றம் எதிர்பார்க்க முடியாது.

    சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.

    ReplyDelete
  3. அவசிய தேவையான குடி நீர் அவசியத்தை உடன் சரிசெய்து கொடுக்க பணிஉடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  4. Namma councilor NKS SHERIFF avargal makkalidam panam petrukondu matra ward makkaluku sevai seithu varugiraar.14 vathu ward makkaluku entha sevaiyum seivathu illai.intha petti kooda nadaipetra parliment therthalil avar wardil DMK kuraintha vote vaangiathaaga katchiyil avaruku semma dose vilunthathaam.

    ReplyDelete
  5. மக்களின் பணியில் அதிரைவாரடு கவுன்சிலர்களின் பங்கு என்ற தலைப்பில் யாரேனும் கட்டு விவரிக்கலாம். அது எம்பி,எம்.எல்.ஏ,சேர்மன்,கவுன்சிலர்களுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  6. அஞ்சு மாசம் தண்ணீ வரலையா, ரொம்ப சுத்தமுங்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.