அரசு விடுமுறை நாளான ஞாயிறு அன்றும் தாலுகா அலுவலகம் இயங்கியது பேராவூரணியில் அதிசயமாக பேசப்பட்டது.
மே 18 ஞாயிறு அன்று பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது .இதுபற்றி விசாரிக்கையில் ,வரும் மே 20 ந்தேதி செவ்வாய் கிழமை பொறியியல் சேர்க்கை விண்ணப்பம் அனுப்ப கடைசி நாளாகும்.ஞாயிறு அன்று அரசு விடுமுறை நாள் என்பதாலும் ,இடையில் தேர்தல் பணிகளுக்காக வருவாய் துறை அலுவலக ஊழியர்கள் ,கிராம நிர்வாக அலுவலர்கள் ,வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டதால் கல்லூரி மற்றும் பொறியியல் ,மருத்துவ பிரிவில் சேர காத்திருந்த மாணவர்கள் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது .
அதனை கருத்தில் கொண்டு அரசின் உத்தரவுப்படியும் ,மாவட்ட ஆட்சியர் மருத்துவர் என்.சுப்பையன் அவர்களின் அறிவுரையின் பேரிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஞாயிறு அன்று சிறப்பு ஏற்பாடாக பல்வேறு வகையான சான்றிதழ்களை வழங்கினர் .
இதுகுறித்து வட்டாட்சியர் இரா.கிருஷ்ணனிடம் கேட்ட போது,
"மாணவ மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு ,அரசின் அறிவுறுத்தலின் பேரிலும் ,வருவாய்த்துறை அலுவலர்களின் ஒத்துழைப்பாலும் இன்று மட்டும் (ஞாயிறு ) சுமார் 500 மாணவ,மாணவியருக்கு வருமான சான்றிதழ் ,சாதி சான்றிதழ் ,முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ,இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பொறியியல் ,மருத்துவ படிப்பில் சேர உள்ள மாணவர்களுக்கு வழங்கியுள்ளோம் .
ஞாயிறு அன்று தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெறலாம் என முன்கூட்டியே பத்திரிக்கை மூலமாகவும் ,நோட்டீஸ் போர்டிலும் அறிவிப்பு செய்திருந்தோம் .அதற்கு மாணவர்கள் ,பெற்றோர்கள் தரப்பிலிருந்து பெருத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது "என்றார் .
சான்றிதழ் பெற வந்திருந்த நீலகண்டன் என்ற மாணவரிடம் பேசிய போது "வருவாய் துறையின் ஏற்பாடுகள் சரி தான் .இனிமேல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சான்றிதழ்களை சரிபார்த்து ,திங்கள் அன்று தான் தபால் மூலமாக விண்ணப்பத்தை அனுப்ப முடியும் .அது அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ள கெடு நாளான செவ்வாய் கிழமை சென்று சேர்ந்து விடுமா ? என அச்சமாக உள்ளது .எனவே அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பம் பெறும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் " என்றார் .
அண்ணா பல்கலைக்கழக நிர்வாகமும் ,அரசும் மாணவர்களின் நிலையறிந்து விண்ணப்பம் பெறும் காலத்தை நீட்டிக்க முன் வரவேண்டும் .
செய்தி தொகுப்பு : பேராவூரணி எஸ். ஜகுபர்அலி

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.