'அதிரையில் எந்த கட்சி எத்தனை வாக்குகள் பெரும் ? Exclusive ரிப்போர்ட் !'
என்ற தலைப்பில் அனுபவமிக்க நடுநிலையான செய்தியாளர்களை கொண்டு கடந்த [ 25-04-2014 ] அன்று அதிரை நியூஸ் இணையதளத்தில் தொகுத்து வழங்கியிருந்தோம்.
இதில் நாம் கூறியிருந்த ரிப்போர்ட் அனைத்தும் உண்மை என நிருபிக்கும் விதத்தில் நேற்று எண்ணப்பட்ட வாக்குகளில் அதிரையர்கள் ஒவ்வொரு கட்சிகளுக்கும் வழங்கியுள்ள வாக்குகள் ஒத்துக்காணப்படுவது நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதிரையர்கள் ஒவ்வொரு கட்சிகளுக்கும் வழங்கியுள்ள மொத்த வாக்குகள்...
திமுக 7614
அதிமுக 4238
காங்கிரஸ் 1041
பிஜேபி 1244
கம்யூனிஸ்ட் 142
நோட்டோ 127
மற்றவருக்கு 79
இனிவரும் பதிவுகளில் அதிரையில் உள்ள எந்த பகுதிகள் எந்த கட்சிகளுக்கு அதிக வாக்குகளை செலுத்தியுள்ளனர் என்பதை பார்ப்போம்.
அதிரை நியூஸ் குழுவினர்
நெருக்கமான கணிப்பு. சிறப்பு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉண்மையாக நடப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கணித்து சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கும்.
ReplyDeleteநெருக்கமான கணிப்பு. சிறப்பு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநெருக்கமான கணிப்பு. சிறப்பு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇது தேவையில்லாத வேலை; அரசியலாரின் கண்களில் பட்டால் பாகுபாடு பார்ப்பர்.
ReplyDeleteசாதுர்யம், சதார்தம் இவைகளைபோலே அதிரை நியூசும் ஒன்று, கருத்து கணிப்பு சொல்ல எவராலும் முடியாது,
ReplyDeleteமுஸ்லிம்கள் திமுகவுக்கு விசுவாசமாகவும், சமுதாயத்திற்கு நலன் வேண்டியும் வாக்களித்த வேளையில், திமுகவினர் கூட்டணி தர்மத்தை மீறியது ஏன்? இனியும் இந்தக் கூட்டணிகள் வேண்டா. வெற்றியோ, தோல்வியோ தனித்து ஒரே குடையில் வரும் வரை இப்படிப் புலம்பிக்கொண்டே இருப்பது தான் விதியா? அல்லது தேர்தலில் நிற்காமல் ராஜ்ய சபாவுக்கு சீட் கேட்டு விட்டு ஒத்துழைக்கலாம், அல்லது அரசியலுக்கும் சீட் வெல்வதற்கும் உண்மை, நேர்மை, கூட்டணி தர்மம் எல்லாம் இந்தக் காலத்தில் எடுபடாது என்று தெரிந்து கொண்டதால் ஒதுங்கிக் கொண்டு சும்மா இருந்து விடலாம். இத்தனை உழைப்பும் வீணாகிவிட்டதே!
ReplyDeleteஒரு குடையின் கீழ் வராதவரை சிங்கம் மாடு கதைதான். அரசியலிலும் மாற்றம் வேண்டும்.
Deleteதேர்தல் நேரத்தில் தனது பங்களிப்பினை நேர்மையாக செய்த அதிரை நியூஸ் தளத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்., குடும்ப ஆட்சி , வாரிசு அக்கப்போர் , ஊழல் குற்றசாட்டு போன்றவை திமுகாவின் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.
ReplyDelete2-G கதாநாயகி கனிமொழியை தேர்தல் பிரசாரத்திற்கு வந்தது, ஊழலின் குறிகோளாக தொழில் செய்யும் மாறனை தேர்தலில் நிறுத்தியது. வசூல் ராஜாவை தேர்தலில் நிறுத்தியது, ஸ்டாலினின் தேர்தல் பிரசாரம் வார்த்தை காமெடிகள் இவைகள் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.
காங்கிரஸ் இல்லாத DMK இனி எழுந்து நடப்பது கடினமே!