.

Pages

Sunday, May 18, 2014

திருக்குரான் மாநாடு குறித்து அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் வேண்டுகோள் ! [ காணொளி ]

அதிரை பைத்துல்மால் - அதிரை வாழ் ஏழை எளியோருக்காக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அதிரையில் செயல்பட்டு வரும் ஒரு இஸ்லாமிய நிதி நிறுவன அமைப்பு. இங்கு வட்டியில்லா நகைக்கடன் வழங்கும் திட்டம், கைவிடப்பட்ட முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான பென்ஷன் வழங்கும் திட்டம், ஏழைக்குமர்களுக்கான திருமண உதவி வழங்கும் திட்டம், வறிய  மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி வழங்கும் திட்டம் மற்றும் மருத்துவ உதவி சுன்னத் உதவி ஆகியன தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதிரை பைத்துல்மால் சார்பில் மாணவ மாணவிகளின் இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை திருக்குர்ஆன் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் திருக்குரான் மாநாட்டை நடத்துவது என்ற முடிவையடுத்து அதன் நிர்வாகிகள் மாநாட்டிற்கு தேவையான முன்னேற்பாடு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாநாடு சிறப்பாக அமைய தினந்தோறும் ஒன்றுகூடி விவாதித்தும் வருகின்றனர்.

நேற்று இரவு திருக்குரான் மாநாடு பணிகளில் ஈடுப்பட்டு வந்த அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத், செயலாளர் அப்துல் ஹமீது, பொருளாளர் சிபஹத்துல்லாஹ், துணைதலைவர் வழக்கறிஞர் அப்துல் முனாப், துணைச்செயலாளர் இப்ராஹீம் ஆகியோர் மாநாடு தொடர்பான அறிமுகம், மாநாட்டின் நோக்கம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள், அதிரை பைத்துல்மால் ஆற்றிவரும் சேவைகள் ஆகியன குறித்து நம்மிடம் விளக்கமளித்தனர்.




No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.