இன்றைய ஆட்டத்தில் அதிரை SSMG அணியினரோடு ஒரத்தநாடு அணியினர் மோதினார்கள். விறுவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தனர். இதைதொடர்ந்து ட்ரைபிரேக்கர் வைக்கப்பட்டது. இதில் ஒரத்தநாடு அணியினர் வெற்றிபெற்றனர்.
வழக்கம் போல் ஆட்ட அம்பயராக வாசு தேவனும், அவருக்கு உதவியாக லோட்டஸ் நெய்னா மற்றும் ராஜிக் அஹமது ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்தனர். இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.
நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் தஞ்சை நேதாஜி அணியினரோடு, சிவகங்கை அணியினர் மோத இருப்பதாக நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தனர்.
விளையாட்டு வீரர்கள், வழி நடத்துவார்கள், இதை பதிவு செய்தவர்கள் அவைவருக்கும் நன்றி.
ReplyDeleteமுயற்சி செய்தால் வெற்றி பெறலாம் ஆனால் முயற்சியே செய்யாமல் நேரடியாக வெற்றிபெற நினைத்தால் முடியுமா. தினமும் முறையாக பயிற்சி செய்தால் வெற்றிபெறலாம். கால்பந்து விளையாட்டு வீரர்களை ஊக்கவிக்க நமதூரில் சரியான ஆட்கள் இல்லாமல் போய்விட்டது. இது தான் உண்மை. SSMG அணியே சரியாக வழிநடத்தி செல்ல ஆட்கள் இல்லை. வரும் காலத்தில் SSMG அணியே வழி நடத்தி செல்ல சரியான ஆட்கள் இருந்தால் நமது அணி வெற்றி கோப்பையே வெல்ல வாய்ப்பு உள்ளது.
ReplyDelete